அகில் மரத் திருட்டு!!!
நான் 1976-1977 ஆண்டுகளில் திரெங்காணு என்னும் மாநிலத்தின் பெஸ¤ட் என்னும் மாவட்டத்தில் இருந்தேன். அதுவும் காடுமலைகள் நிறைந்த பிரதேசம்தான்.
மலாய்க்காரர்கள் மட்டுமே வசிக்கும் இஇடம். சில சீனர்களும் மூன்று தமிழர்களும் ங்கிருந்தோம்.
அந்த வட்டாரத்தில் ஆதிவாசிகள் அதிகம். நரிக்கொம்பு விற்கமாட்டார்கள். ஆனால் காண்டாமிருகக் கொம்பு விற்பார்கள்.
உட்புறமுள்ள மலைகளுக்குச் சென்று மூலிகைகள், அரிய கற்கள், புனுகு, தேன், புலித்தோல், நகம், போன்றவற்றைக் கொண்டு வருவார்கள்.
இஇந்த மாதிரி விஷயங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம் என்பது தெரிந்து மாவட்ட சுகாதார நிலையத்துக்கு வருவார்கள்.
அப்போதெல்லாம் அந்தப் பக்கங்களில் டாக்டர் என்றால் supermen போல.
ஆகையால் அவர்கள் அவ்வப்போது அரிய பொருட்களைக் கொண்டுவந்து காட்டிச் சென்றார்கள்.
பல பொருள்களை அப்போதெல்லாம் விலைக்கு வாங்குவது உண்டு.
ஒருமுறை அகில் கட்டை ஒன்றைக் கொண்டுவந்தார்கள். கருஞ்சாக்லேட் நிறத்தில் இஇருந்தது. சரியான கனம்; அடர்த்தி.
'காரு'(gaaru) என்று அதனைச் சொன்னார்கள். உண்மையிலேயே அவர்கள் மொழியில் அது 'அகாரு'(agaaru). ஆனால் அந்தப் பக்கங்களில் மலாயை ஒரு தினுசாகத்தான் பேசுவார்கள். ஒரு சிறிய கட்டைதான் அது. கால் கீலோதான் இஇருக்கும். 480 ரீங்கிட் விலை சொன்னான். அப்போதெல்லாம் 480 ரீங்கிட்டில் 16 பவுன் தங்கம் வாங்கிவிடலாம்.
அகிலை சமஸ்கிருதத்தில் அகரு என்றும் சொல்வார்கள்.
அதுதான் 'காரு'வாகி விட்டது.
கால் கீலோ அகில் கட்டை அந்தக் காலத்திலேயே - அதாவது 1976-ஆம் ஆண்டிலேயே 480 ரீங்கிட். அதாவது 1920 ரீங்கிட்.
அப்படியானால் இந்தக் காலத்தில் எவ்வளவு இருக்கும்!
அப்பேற்பட்ட அகில் மரம் ஒன்றை சமீபத்தில் - பிப்ரவரி 2012-இல் திருட்டுத் தனமாக வெட்டி விற்றிருக்கிறார்கள்.
அந்த மரத்தின் அடிப்பாகத்தைப் பாருங்கள்?
எத்தனை பருமன்!
எத்தனை நூற்றாண்டுகளாக அது வளர்ந்திருக்கும்!
எத்தனை மீட்டர் உயரம் இருந்திருக்கும்!
வெட்டப்பட்ட மரத்தின் பகுதி மட்டும் எத்தனை ஆயிரம் கீலோ இருந்திருக்கும்!
அப்படியானால் அந்த மரத்தின் தற்கால விலை என்ன?
$$$$$$$$$$$$$$$$$$$$