Tuesday, June 25, 2013

MALAYSIAN HAZE

மலேசியப் புகை மூட்டம்  

சுமாத்ராத் தீவில் பல இடங்களில் காடுகளுக்குத் தீ வைத்திருக்கிறர்கள். பல இடங்களில் மிகப் பெரிய அளவில் தீ பரவிவிட்டது.  அணைக்க முடியாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. காட்டுத்தீயால் ஏற்படும் மிகுதியான அடர்த்தியான புகை, தென் மேற்கிலிருந்து வரும் பருவக்காற்றினால் மலாயாத் தீபகற்பத்தின் பல பாகங்களையும் மூடிவருகிறது. பெரிய மழை ஏதும் சமீபத்தில் இல்லை.  கீழ்க்கண்ட படங்களில் புகை மூட்டத்தின் கடுமையைக் காணலாம். 




புகை மூட்டத்தால் மூடப்பட்டிருக்கும் கோலாலும்ப்பூர். தூரத்தில் நடுவில் உயரமாகத் தெரிவதுதான் கோலாலும்பூரின் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம்.




இரண்டு படங்களும் ஸாட்டிலைட் படங்கள். சுமாத்ராவில் ஆங்காங்கு சிவப்பு நிறத்தில் காட்டுத் தீக்களையும் அவற்றிலிருந்து ஏற்பட்ட புகை தென்மேற்குப் பருவக்காற்றால் உந்தப்பட்டு மலாயாத் தீபகற்பத்தை மூடுவதையும் காட்டுகின்றன.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Wednesday, June 19, 2013

HOW I GAVE HALVA




நான் அல்வாக் கொடுத்த கதை

        நான் அல்வாக் கொடுத்த கதை ஒன்று உண்டு.
ஆட்டோபையக்ரா·பி கேட்பவர்கள் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை ஏற்கனவே வேறொரு இழையில் அகத்தியரில் எழுதியுள்ளேன்.

இப்போது இன்னும் விரிவாக - அல்வாவுக்குக் கூடுதலாகப் பிசிபிசுப்பு 
ஏற்றி - எழுதியுள்ளேன்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த 
விஷயம்......

மதுரையில் மேல ஆவணிமூல வீதியில் சிறிய ஒட்டுக்கடை ஒன்று இஇருந்தது. அங்கு அல்வாதான் ஸ்பெஷல்.
மேலக் கோபுரத் தெரு முனங்கின் அருகில் 'பண்டாபீஸ்' என்று சொல்லப்பட்ட ஒரு நிறுவனம் இருந்தது. அங்கு ஒரு Gong எனப்படும் வெங்கலத் தட்டு ஒரு கம்பியில் கட்டப்பட்டு தொங்கும். மணிக்கு மணி ஒரு டவாலி சேவகர் அந்தத் தட்டில் ஓர் இரும்புக் கோலால் அடிப்பார். எத்தனை மணியோ அத்தனை தடவை அடிப்பார்.
அந்த மணியை 'பண்டாபீஸ் மணி' என்று குறிப்பிடுவார்கள்.
இப்போது ஆளடிக்கும் அந்த மணியெல்லாம் இருக்கமாட்டாது. அதற்கு அருகாமையில் மேலக் கோபுரத் தெருவில் தலையாட்டி பொம்மைக்கடை என்ற பொடிக்கடை இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லை என்று சொன்னார்கள். தெரு முக்கில் இருந்த பீமபுஷ்டி அல்வா விற்கப்படும் தள்ளுவண்டி இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
அல்வாக் கடைக்குப் போவோம்.
பண்டாபீஸ் இருந்த வரிசையிலேயே அந்தக் கடையும் இருந்தது.
மிகவும் பருமனான ஐயர் ஒருவரின் கடை அது. 'மணியய்யர் கடை' என்று சொல்வார்கள்.
ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடை அதே ஏரியாவில் 
அடுத்த தெருவாகிய மேலச்சித்திரை வீதியில் இருந்தது. அதற்கு மிக 
அருகாமையிலே அந்த ஐயர் அல்வாக்கடை வைத்திருந்தார்.
'ஒரிஜினலுக்கே அல்வாக் கொடுத்தவர்' என்றால் அவர்தான்.
கிட்டத்தட்ட நரசு'ஸ் காப்பி சின்னத்தில் வருவாரே, ஓர் அய்யங்கார்? 
அந்த மாதிரி இஇருப்பார். ஆனால் க்ரூ-கட் நரை முடி; பனியன் போட்டிருப்பார்; வேட்டியைத் தட்டுச்சுற்றாக அணிந்திருப்பார்.
அங்கு எப்போதும் நாட்டுப் பழங்கள் சீப்புச் சீப்பாகத் தொங்கிக் 
கொண்டிருக்கும். ஒரு சிறிய வேம்பாவில் பசும்பால் கொதித்தவண்ணம் 
இருக்கும். அந்த பால் வேம்பா மிகவும் பளபளவென்று இருக்கும். அதில் முப்பட்டையாக விபூதி பூசியிருப்பார். சந்தனக் குங்குமமும் 
அணிவித்திருப்பார். டபரா டம்ளர்கள். அவையும் பளபளவென்று மின்னும். எல்லாமே பித்தளை. எவர்சில்வர் கிடையாது. அந்தப் பாலின் ருசியே தனி. மணமிகுந்தது. நன்றாகக் காய்ச்சப்பட்டு விளங்கியது. 
அந்தக் கடையில் அல்வா எப்போதும் தயார் நிலையில் இஇருக்கும்.
தனித் தன்மை வாய்ந்த அல்வா.
ஒவ்வொரு நாளும் ஒஇருமுறை அந்த அல்வாவைத் தயாரிப்பதாகச் சொன்னார்.
அந்த அல்வா கொழக்கொழவென்று நெய் சொட்டச் சொட்ட, கருமை 
நிறத்தில் இஇருக்கும். வாயில் போட்டால் நாக்கு மேலன்னம் ஆகிய இஇடங்களில் ஒட்டும். மெதுவாகச் சப்பிச் சுவைத்துச் சாப்பிடவேண்டும். வேகமாகச் சாப்பிட்டால் தொண்டையில் ஒட்டிக்கொள்ளும். விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.
         ஆனால் அந்த ருசி, தேவலோக சம்பந்தமான ருசி.



ஜாதிக்காய், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவை 
அல்வாவில் சேர்ந்திருப்பதை உணரமுடிந்தது. வேறு ஏதேனும் - கொக்காக் 
கோலா, கேயெ·ப்ஸீ மாதிரி - ஸீக்ரட் ரெஸிப்பி இருந்ததா என்பது 
தெரியவில்லை. இருந்திருக்கும். இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் 
மதுரையிலோ வேறு எங்குமோ அந்த மாதிரி அல்வாவைக் கண்டதில்லை. 
உண்டதில்லை. ஆகவே விண்டதில்லை.

மருத்துவக் கல்வியின்போது முதலாவது கிளினிக்கல் ஆண்டில் க்ஷயரோக மருத்துவமனையில் ஒருமாத காலம் பயிற்சி இஇருக்கும். அந்தத் துறையின் 
பேராசிரியராக டாக்டர் கதிரேசன் இருந்தார்.
தினமும் காலையில் மண்டை ஓட்டு பஸ்ஸில் மதுரையிலிருந்து பதினான்கு மைல் தூரத்தில் உள்ள ஊருக்குச் செல்லவேண்டும். திருப்பரங்குன்றம் தாண்டி அந்த ஊர்.
அதென்ன மண்டை ஓட்டு பஸ்?
மதுரை மருத்துவக் கல்லூரியின் காலேஜ் பஸ்.
அந்த நீலநிற பஸ் தனது முகப்பில் மேல்புறத்தில் இருந்த போர்டில்  
மண்டை ஓடு - கபாலமும் இஇரண்டு குறுக்கெலும்புகளும் போட்டிருக்கும். பழங்கால கடற்கொள்ளைக்காரர்கள் கட்டியிருப்பார்களே Jolly Roger கொடி, அது போல. காபாலிக பஸ். அதனை மதுரைக்காரர்கள் 'மண்டை ஓட்டு பஸ்' என்று அழைப்பார்கள்.
போகும்போதும் வரும்போதும் கூச்சல் போட்டுக்கொண்டு கண்டதனமாகப் பாட்டு பாடிக்கொண்டே வருவதால் மதுரைக் காரர்களுக்கு அந்த பஸ்ஸைக் கண்டால் அலர்ஜி.
அதான் அப்படியெல்லாம் பெயரிட்டார்கள். 
இஇப்போதும் அந்த பஸ் இஇருக்கா, என்ன? கிழண்டு போயிருக்குமே?
மருத்துவ மாணவர்களாக இருக்கும்போது பல மாணவர்கள் ரொம்பவும் ஜாலியாகவும் கலாட்டா செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
டாக்டர்கள் ஆனபிறகு அவர்களுடைய ஜாலிநெஸ், கலாட்டாத் தன்மை, ஹாஸ்ய உணர்ச்சி, சிரிப்பு எல்லாமே போய்விடுகிறது. அவர்களாகவே அப்படி அவற்றையெல்லாம் மறக்கிறார்களா, மறைக்கிறார்களா, அல்லது அடியோடு அழித்துக் கொள்கிறார்களா என்பது பட்டிமன்றத்துக்கு உரிய விஷயம். சாலமர் பாப்பய்யர், லியோனி ஆகியோர் பேசித் தீர்க்கவேண்டிய விஷயம். (வயசான ஆசாமி. அவரைக் கொஞ்சம் மரியாதையாக அழைக்கவேண்டியதாக இருந்தது. அதான் 'சாலமர் பாப்பய்யர்'). 
ஆனால் சில டாக்டர்கள் தங்களுடைய கொனஷ்டை, குசும்பு, கிருது 
ஆகியவற்றை விடுவதில்லை.
அதான் பார்க்கிறீர்களே.

டீபீ ஸானட்டோரியத்தில் பத்துமணி சுமாருக்கு டீட்டைம் என்னும்
இஇடைவேளை உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர்/மாணவி ஏதாவது தின்பண்டம் கொண்டு வரவேண்டும்.
என்னுடைய முறை வரும்போது 'மேலாவணி மூலவீதி ஸ்பெஷல்' என்று சொல்லி அந்த அல்வாவைக் கொண்டுவந்து கொடுத்தேன்.
அனைத்து மாணவ மாணவிகளும் பேச்சற்றுத் திக்குமுக்காடிப் போயினர். நாக்கு, மேலன்னம், தொண்டைக்குழி எங்கணும் அல்வா.
'கையில் ஓர் பாதி; தொண்டையில் மீதி' என்ற மாதிரியில் அவர்கள் 
திணறியது....!
'அல்வாதானே. விழுவிழுவென்று வழுக்கிக்கொண்டு இஇறங்குமே' என்ற அவசரத்தில் விழுங்கியதால் அந்தப் பாடு.
"ஏன்வே, பாரதி. இன்னோரு தரம் கொண்டாந்தியனாக்கே கீழ, தரயிலயும் தடவிவெய்யும்வேய்! நிக்காம்போல ஒட்டிக்குவம். ஓடமுடியாதுவேய். இன்னோனும்வேய். தாள்ல தடவி வெச்சு விப்பம். காலரா கபே மார்ரி எடத்துல இஇருக்கும் ஈயெல்லாம் ஒட்டிக்கும். நல்லாப் பணம் பண்ணலாம்வேய்".
ஒரே ஒரு மிஸ்டேக். 
மேலாவணிமூல வீதியில் அனல் அடுப்பின்மேல் சிறிய அண்டாவில் 
சுடச்சுட இருந்த அல்வா, உருகி வழியும் நெய்யோடு, 'விழுவிழு'வென்று 
தொண்டையில் இறங்கிவிடும்.
வாங்கி இத்தனை மணி நேரம் கழித்து, என்னென்ன ஆர்கானிக் 
கெமிக்கல், பையோக் கெமிக்கல் மாற்றங்களுக்கு ஆளாகியதோ. அதான் 
அந்தப் பிசிபிசுப்பு.
இதான் 'நான் கொடுத்த அல்வா' கதை,

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$4



YAB AND YUM


Friday, June 7, 2013

COPY-CAT


காப்பிப் பூனை

பெரிய மனிதர்களைப் பார்த்து அவர்களை Ape செய்வது சர்வ
சாதாரணமாகக் காணப்படுவது. அவர்களுடன் சேர்வது, அவர்களுடன் 
தொடர்பு இருப்பதுபோல காட்டிக்கொள்வது முதலியவை, வலியக்கப் போய் ஒட்டிக்கொள்வது, பேசுவது போன்ற பழக்கங்கள் பலருக்கு இருக்கும். 
 இதை சுஜாதா 'Association with the Famous' என்று சொல்வார். 
அவருடன் வலிந்து பேசவோ, பழகவோ பலர் முயல்வதைத்தான் அவர் 
அப்படிச் சொல்லியிருக்கிறார். 
 பாவம். அவருடைய உண்மையான Fanகள்கூட சகட்டுமேனிக்கு 
இப்படி அவமானப்படவேண்டியிருக்கிறது. எல்லாருக்குமே அந்த 
அவச்சொல்தானே.

 கூலிட்ஜ் என்பவர் யூஎஸ்ஸின் ஜனாதிபதியாக இருந்தவர். 
 அவருடைய ஊர் ஆட்களை ஒருமுறை வெள்ளை மாளிகைக்கு 
அழைத்திருந்தார். விருந்து கொடுத்தார். 
 பெரிய மனுஷாளுஹளுடன் சாப்பிடும்போது Table Manners 
என்பனவற்றைக் கடைபிடிக்கவேண்டியிருக்கும். 
 எப்படி உட்காரவேண்டும்; நேப்கின்னை எப்படிக் கழுத்தில் கட்டிக்
கொள்ளவேண்டும், எந்த நேப்கின்னை மடியில் போட்டுக்கொள்ளவேண்டும். 
எதை முதலில் எப்படி சாப்பிடவேண்டும் என்று ஆயிரத்தெட்டு ஆசாரங்கள் இருக்கும். 
 கூலிட்ஜின் ஊர்க்காரர்கள் 'எதற்கு வம்பு' என்று எண்ணிக்கொண்டு 
சாப்பிடும்போது கூலிட்ஜ் என்னவெல்லாம் செய்கிறாரோ அதையெல்லாம் 
அப்படி அப்படியே செய்யத் தீர்மானித்தனர். 

 அப்படியே சாப்பாடு நடந்துகொண்டிருந்தது. 
 காப்பி சாப்பிடும்வரை எல்லாம் ஓக்கே. 
 கூலிட்ஜ் பால் கூஜாவை எடுத்தார். எல்லாரும் பால்கூஜாவை எடுத்தனர். 
கப்பில் பாலை ஊற்றினார். அனைவரும் கப்பில் பாலை ஊற்றினர். 
 கப்பை எடுத்தார். அனைவரும் கப்பை எடுத்தனர். 
 ஸாஸரில் கப்பிலிருந்து பாலை ஊற்றினார். அனைவரும் ஸாஸரில் பாலை ஊற்றினர். 
 ஸாஸரைக் கையில் எடுத்தார். அனைவரும் எடுத்தனர். 
 So far so good.
 கீழே குனிந்தார். தரையில் ஸாஸரை வைத்தார்.
 அவருடைய செல்லப்பூனை அங்கிருந்தது. 
 அது ஸாஸரிலிருந்த பாலைக் குடிக்கலாயிற்று.....

 Aping Technic எப்போதும் வேலை செய்யாது. 
 அதுசரி!
 உங்களில் யாருக்காவது 'காப்பி அடிக்கும் குரங்கு' கதை தெரியுமா?

Tuesday, June 4, 2013

HINDUISM - PAST, PRESENT, FUTURE



 இந்து சமயம் - நேற்று, இன்று, நாளை
துறை: வருங்காலவியல் 
நிகழ்வு: 1990-1991



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

HINDUISM-PAST PRESENT AND FUTURE



'இந்து சமயம் - நேற்று இன்று நாளை' 
பேருரை 
வருங்காலவியல் துறை 
நிகழ்வு 1994-ஆம் ஆண்டு