மலேசியப் புகை மூட்டம்
சுமாத்ராத் தீவில் பல இடங்களில் காடுகளுக்குத் தீ வைத்திருக்கிறர்கள். பல இடங்களில் மிகப் பெரிய அளவில் தீ பரவிவிட்டது. அணைக்க முடியாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. காட்டுத்தீயால் ஏற்படும் மிகுதியான அடர்த்தியான புகை, தென் மேற்கிலிருந்து வரும் பருவக்காற்றினால் மலாயாத் தீபகற்பத்தின் பல பாகங்களையும் மூடிவருகிறது. பெரிய மழை ஏதும் சமீபத்தில் இல்லை. கீழ்க்கண்ட படங்களில் புகை மூட்டத்தின் கடுமையைக் காணலாம்.
புகை மூட்டத்தால் மூடப்பட்டிருக்கும் கோலாலும்ப்பூர். தூரத்தில் நடுவில் உயரமாகத் தெரிவதுதான் கோலாலும்பூரின் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம்.
இரண்டு படங்களும் ஸாட்டிலைட் படங்கள். சுமாத்ராவில் ஆங்காங்கு சிவப்பு நிறத்தில் காட்டுத் தீக்களையும் அவற்றிலிருந்து ஏற்பட்ட புகை தென்மேற்குப் பருவக்காற்றால் உந்தப்பட்டு மலாயாத் தீபகற்பத்தை மூடுவதையும் காட்டுகின்றன.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment