நிர்வாக இயலும் சீனச் சிற்றுண்டிச் சில்லறை ஸ்டாலும்
மலேசியாவின் ஜனத்தொகையில் 35 சதவிகிதம் சீனர்கள். இவர்கள் மலாயாவின் எல்லா பாகங்களிலும் சமமாகப் பரவியிருக்கவில்லை. சில இடங்களில் சில ஊர்களில் அதிகமாக இருப்பார்கள். பல இடங்களில் மிகக் குறைவாகவே காணப்படுவார்கள். அவர்கள் இருக்கும் இடங்களில் Food Court என்னும் சாப்பாட்டு மையங்கள் இருக்கும். ஒரு சதுரமான சதுக்கத்தின் ஓரங்களில் பல குட்டிக் குட்டிக் கடைகள். அவை உண்மையிலேயே சக்கரமில்லாத வண்டிகளின் மீது அமைந்தவை.
அதை ஸ்டால் என்று சொல்லக்கூட முடியாத அளவுக்குச் சிறிய வண்டி.
அந்த வண்டிக்குக் கூரை இருக்கும். அந்தக் கூரைக்குக் கீழே ஒரு சிறிய கண்ணாடி அலமாரி இருக்கும். அதில் ஒரே ஒரு தட்டுத்தான். அந்த ஸ்டால் காரன் எந்தவிதமான உண்டிகளைத் தயார் செய்கிறானோ, அவற்றிற்கான கச்சாப் பொருட்கள் அதில் இருக்கும்.
வண்டியின் பக்கவாட்டில் ஓர் அடுப்பு. அடுப்புக்குப் பக்கத்தில் கேஸ் டாங்க். அடுப்பின் மீது க்வாலி எனப்படும் பெரிய இருப்பு வாணலி. உண்டியில் சேர்க்கப்படும் சில பொருட்களை அவித்துப் போடவேண்டும். அதற்காகத் 'தள புள தள புள' என்று ஒரு பெரிய அலுமினியப் பானையில் சூப் கொதித்துக் கொண்டிருக்கும். சோயா முளை போன்றவற்றை ஒரு பெரிய வடிகட்டியில் வைத்துக்கொண்டு, அந்தத் 'தளபுள' சூப்பிற்குள் இட்டு எடுப்பான்.
Food-Court-களில் கை கழுவும் இடம் இருக்கும். சில ·பூட்-கோர்ட்டுகளில்
கழிவறையும் இருக்கும்.
இந்த மாதிரியான சீனச் சிறு சில்லறை வியாபாரிகளை Hawkers என்று அழைப்பார்கள்.
பீஹூன் கோரேங்
மீ கோரேங்
க்வேய்த்தியாவ் கோரேங்
அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான உண்டிகளைத் தயார் செய்து விற்பார்கள். மீ கோரேங் எனப்படும் பாஸ்ட்டா மாதிரிப்பட்ட உண்டியைச் செய்பவன் அதைத்தான் செய்வான். க்வெய்த்தியாவ் செய்பவன் அதைத்தான் செய்வான். ஒவ்வொரு ஹாக்கரும் சிலவகை உண்டிகளை மட்டுமே செய்வான்.
இது ஒரு ஸப்-ஸ்பெஷலைஸேஷன். பலவற்றைச் செய்து உலப்பிக்
கொண்டிருக்க மாட்டான். அவன் செய்யும் அந்த மீகோரேங் அவனுக்கே
உரியதாகவும் தனித்தன்மை பொருந்தியதாகவும் இருக்கும். நம்ம மதுரை
வெங்கலக் கடைத் தெரு பாண்டியன் ஹோட்டல் புறா வறுவல், அம்சவல்லி பவன் பிரியாணி மாதிரி.
இன்னொரு ஸ்பெஷியாலிட்டி...... அவனவன் செய்யும் உண்டிகளுக்குத் தேவையான சேர்மானப் பொருட்களை மட்டுமே வைத்திருப்பான். ஒவ்வொரு நாளும் எத்தனை மீகோரேங் செலாவணி ஆகிறதோ, அதற்கேற்ற எண்ணிக்கை முட்டை, கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை வைத்திருப்பான். வெள்ளைப்பூண்டு உரிக்கப்பட்டு ஸைஸாக வெட்டப்பட்டிருக்கும். அதுபோலவே வெங்காயம், தோ·பூ என்னும் ஸோயா கேக் எல்லாமே.
ஒரு குறிப்பிட்ட ஹாக்கர் மீ கோரேங், பீஹ¥ன் கோரேங், க்வெய்த்தியாவ் கோரேங் போடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் எதை அதிகமாகச் செய்கிறானோ அந்த உண்டிக்கு உரிய சேர்மானக் கூட்டுப் பொருட்கள்தான் கைக்கு எட்டிய தூரத்தில் குறிப்பிட்ட இடங்களில் சுற்றிலும் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பிடி, ஒவ்வொரு சிட்டிகை, ஒவ்வொரு கரண்டி... இப்படி எடுத்துப் போடமுடியும். எதையும்
தடவிக்கொண்டோ தேடிக்கொண்டோ இருக்கமாட்டான்.
மிக விரைவாக அவனுக்கு வரும் ஆர்டர்களுக்கு உண்டிகளைச் செய்துகொடுத்துவிடுவான்.
Time Management, Efficient Service முதலியவற்றைத் தன்னகத்தே
கொண்ட டெக்னிக்கைத்தான் நாங்கள் Chinese Hawker's Technic என்று
குறிப்பிடுகிறோம்.
மலேசியாவில் உள்ள Management Training-இல் இதையும் சொல்லிக்
கொடுக்கிறார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சீனனைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு.
ReplyDeleteமிக அருமை.ஒரு புது விடயம் அறிந்தேன்.நன்றி.
ReplyDeleteஉன்னிப்பான பார்வையில் எழுதி இருக்கிறீர்கள். அவர்களிடம் கண்ட நிர்வாக உத்தி அவர்களுக்கே தெரிந்து இருக்காது இது மேற் படிப்பில் சொல்லி கொடுக்கும் பாடம் என்று.
ReplyDelete