மாறிவந்த ஒரு ரூபாய் நாணயம்
1940-ஆம் ஆண்டிலிருந்து சமீபகாலம்வரைக்கும் இந்திய 1 ரூபாய் நாணயம் எப்படி மாறி வந்துள்ளது என்பதைக் காட்டும் படம்
1940-ஆம் ஆண்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆட்சியின்போது வெளியிட்ட நாணயம். இது பெரும்பகுதி வெள்ளியுடன் சிறிதளவு செம்பு கலந்த நாணயம்.
1947-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'புலிக்காசு'. இது கனமான நாணயம். நிக்கல் கலவை.
அதன் பின் வந்த காசுகளையும் காணலாம். நிக்கலும் செம்பும் கலந்த
கலவையால் செய்யப்பட்ட நாணயங்கள். குறுக்களவிலும் குறைந்து கனமும் குறைந்து வந்தன.
பின்னர் வந்த காசுகள் ஸ்டேய்ன்லெஸ் ஸ்டீலால் செய்யப் பட்டிருக்கின்றன.
கடைசியாக வெளிவந்த காசு மெல்லியதாகவும் சிறியதாகவும் உள்ளது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment