அன்பர்களே,
இப்போது நான் குறிப்பாகச் சொல்லப்போவது இன்றைய இந்து தமிழ் இளைஞர்களைக் குறித்து. ஏனெனில் அவர்களைப் பற்றித்தான் நான் இரண்டு தலைமுறைகளாக ஆராய்ந்து வருகிறேன். அதிலும் மிகவும் நுணுகி
ஆராய்ந்திருப்பது மலேசியத் தமிழ் இளைஞர்களை. அமெரிக்காவில் உள்ள இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரையும் தற்சமயம் ஆராய்ந்து வருகிறேன்.
1979-இலிருந்து 1995 வரைக்கும் ஒரு குறிப்பிட்ட தலைமுறையைச் சேர்ந்த 20 - 30 வயதுகளுக்கு இடைப்பட்ட இளைஞர்கள். இவர்கள் ஒரு தலைமுறை.
1995-இலிருந்து 2004 வரைக்கும் ஒரு குரூப்.
அதன் பின்னர் உள்ள இன்னொரு குரூப்.
1979-இலிருந்து இளைஞர்கள் இயக்கங்கள், அவர்களின் சிந்தனைகள், அவர்களின் நடவடிக்கைகள், தலைமைத்துவம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு
காட்டினேன்.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது ஒன்று தோன்றுகிறது. "இந்த மாதிரி ரொம்பவும் Sketchy-யாக எழுதினால் கருத்துக்களும் கருத்துக்களின் தாக்கமும் எந்த அளவுக்கு இருக்கும்?"
விலாவாரியாக எழுதினால் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
இதெல்லாம் ஆய்வுக்குரிய விஷயம். மலாயா பல்கலைக் கழக இந்தியத்துறையால் ஆய்வு செய்யப்படவேண்டிய விஷயம்.
ஆனால் செய்யமாட்டார்கள்.
ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு தீஸிஸ் எழுதவேண்டியிருந்தது.
அந்தப் பெண் படித்துக்கொண்டிருந்தது மலாய்க்காரர்கள் மிகுதியாக உள்ள பல்கலைக் கழகம். தீஸிஸ் மலாய் மொழியில் இருக்கவேண்டும்.
அந்தப் பெண் யோசனை கேட்டு வந்தபோது இந்தியர் சம்பந்தப்பட்ட ஆய்வைச் செய்யுமாறு சொன்னேன்.
"இந்திய தேசிய ராணுவம் எனப்படும் ஐஎன்ஏ பற்றிய ஆய்வைச் செய்யலாம். மலாய் மொழியில் அது இடம் பெறும். வேறு யாரும் இதைப் பற்றி ஆய்வைச் செய்யவில்லை", என்றேன்.
ஐஎன்ஏ-யைப் பற்றி என்னிடம் பதினைந்து நூல்களும் கட்டுரைகளும் என்னுடைய தந்தையாரின் டயரியும், என் அண்ணனுடைய மாமனார் எழுதிய
'தென்கிழக்காசியாவில் நேதாஜியின் விடுதலைப் போர்' என்னும் இன்னும் வெளியாகாத நூலும் இருந்தன.
அந்தப் பெண் வெற்றிகரமாக தீஸிஸ் எழுதிவிட்டது. மாஸ்டர்ஸையும் முடித்துவிட்டு இப்போது ஆசிரியையாக இருக்கிறது.
ஆனால் இந்தியர்களுக்கு உரிய, ஒரு பல்கலைக் கழக இந்தியத்துறை இதை ஆய்வு செய்ததில்லை.
இப்போது இளைஞர்கள் விஷயத்துக்கு வருகிறேன்.
மலேசியஇந்துத் தமிழ் இளைஞர்களிடம் தற்சமயம் விரும்பத் தகாத, ஆபத்தான, விபரீதம் மிக்க வாழ்வியலும் போக்கும் காணப்படுகிறது.
மலேசியஇந்துத் தமிழ் இளைஞர்கள் என்று தனிமைப் படுத்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ் இளைஞர்களில் முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் முதலியோர் நன்றாக இருக்கிறார்கள். அவர்களில் நெகட்டிவ் விஷயங்கள் குறைவு. ஆகவேதான் இந்து என்று குறிப்பிட்டு எழுதவேண்டியுள்ளது. மலேசியாவில் இந்திய வம்சாவளியினரின் தெலுங்கர், மலையாளிகள், சீக்கியர், இலங்கைத் தமிழர்கள் முதலியோர் உண்டு. அவர்களிடையே நெகட்டிவான விஷயங்கள் குறைவு. மலையாளிகள், சீக்கியர், இலங்கைத் தமிழர்களியைடையே குண்டாயிஸம், ரவுடியிஸம், கொள்ளையர், வழிப்பறித் திருடர், கொலைகாரர்கள் - பொதுவாகக் குற்றச்செயல்கள் செய்பவர்களும்
பொருளாதார ரீதியில் அடிமட்டத்தில் இருப்பவர்களும் தற்சமயம் குறைவு.
ஆனால் இந்துத் தமிழ் இளைஞர்களிடையே அதிகம். மிக அதிகம்.
தொடர்ந்து சொல்கிறேன்.....