Saturday, August 30, 2014

ARCHEOLOGY-U.TRGN

ARCHEOLOGICAL REMNANTS IN ULU TRENGGANU




ஊலூ தரெங்காணு மாவட்டத்துக் காடுகளில் எங்கோ ஓரிடத்தில் பொன் மயமான நகாரா எமாஸ் என்னும் நகரம் இருந்தது என்பது ஒரு கர்ண
பரம்பரைச் செய்தி. கிட்டத்தட்ட அது இன்ன இடத்தில்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தேன். அதன் நிமித்தமே படகில் 
சுங்கை தரெங்காணு ஆற்றின் உட்புறமாகச் சென்றது. அப்போது அந்த 
குத்துக் கற்பாறைகள் மேலும் செல்வதைத் தடுத்தன. 
புக்கிட் கப்பல் என்னும் இடமும் அந்த ஆற்றின் கிளை நதிகளில் 
ஒன்றை ஒட்டித்தான் இருந்தது. 
இப்போது ஊலு தரெங்காணுவின் கால்வாசி நிலம் ஒரு செயற்கை 
ஏரிக்குள் மூழ்கிக் கிடக்கிறது. 
கென்யிர் என்னும் அந்த ஏரிதான் தென்கிழக்காசியாவிலேயே மிகப் 
பெரிய செயற்கை ஏரி.
அதைக் கட்டுவதற்காகக் காடுகளை அழித்த போது ஓரிடத்தில் 
புராதனக் கட்டடச் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ஆனால் அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை. தகவல்களையும் 
வெளியிடவில்லை. அந்த நகாரா எமாஸ் நகரின் எச்சங்கள் இவை 
என்று தீர்மானிக்க இயலவில்லை. 
இப்போது சுத்தமான ஏரியல் ·போட்டிகிரா·பி, ஸாட்டலைட் 
இமேஜ் ஸ்டடி, ரிமோட் ஸென்ஸிங் போன்ற டெக்னாலஜியை வைத்து 
ஆராய முயற்சிக்கலாம். 
அங்க்கோர் வாட் பிரதேசத்திலும் இந்த மாதிரி ஆய்வுகள், எக்ஸ் ரேய், 
ராடார் முதலியவை உட்பட்ட பல வித டெக்னாலஜிகளைப் பயன்படுத்திப் 
பார்த்தார்கள். இப்போது நமக்குத் தெரியும் அங்க்கோர் போல இன்னும் 
நான்கு மடங்கு அளவுக்கு அந்த நகரம் பரவியிருந்ததைக் கண்டு
பிடித்துள்ளார்கள்.
ஆனால் மலேசியாவில்?
இந்த நகாரா எமாஸ¤ம் இன்னொரும் கோத்தா கெலாங்கியாக 
ஆக்கப்படும். கோத்தா கெலாங்கி?
கீழ்க்கண்ட லின்க்கில் பார்க்கவும் - 


எந்தப் பாதையில் அந்த நகாரா எமாஸ் நகரத்துக்குப் போயிருப்பார்கள்? இது இன்னொரு மர்மம். அதற்கும் ஏதோ ஒரு விடுப்பு கிடைத்தது. ஆனால் 
அப்போது அல்ல.
இன்னொரு சமயம். வேறோர் இடத்தில்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, August 29, 2014

ARCHEOLOGY


ARCHEOLOGICAL RESEARCH IN
TRENGGAANU
தரெங்காணு மாநிலத்தின் 
ஊலு தரெங்காணு மாவட்டத்தின் 
குவால பெராங் ரூரல் ஹாஸ்ப்பிட்டல் தலைமையக அலுவலர்கள்
1974



நடுநாயகமாய் டாக்டர் ஜெயபாரதி (ஜேய்பி)



சீனச் சாயலில் காக்கேஸியன் தன்மைகளுடன் கூரிய நாசியும் நெளிநெளியான தலைமுடியும் காஃபி கலர் கண்களும் கொண்ட ரஷீத்

Wednesday, August 27, 2014



ULU TRENGGAANU
இவ்வளவு சிரமப்பட்டும் தேடியது ஏது கிடைக்கவில்லை என்ற 
ஆதங்கம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. 
தரெங்காணு ஆறு குவால பெராங்கிலிருந்து மேற்கே செல்லும். 
இன்னொரு பெரும் கிளை வடக்கே செல்லும். வடக்கே செல்லும் 
கிளையின் கரையில்தான் அந்த புக்கிட் கப்பால் என்னும் இடமும் 
இருக்கிறது.
இப்போது இருப்பது போல ஜியாக்ர·பி, ஜியோமார்·பாலஜி போன்றவை 
அந்தக் காலத்தில் இருக்கவில்லை. மாறியிருந்தன.
பல காரணங்கள். 
அடிக்கடி காடு, காடு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். 
இந்தக் காடுகள் சாதாரணக் காடுகள் இல்லை. 
Tropical Jungles, Verdant Jungles என்னும் வகையைச் சேர்ந்தவை.
மரங்கள் மிகவும் பருமனாகவும் மிக உயரமாகவும் இருக்கும். கிளைகள் மிக முரடாக அகன்று, விரிந்து பல அடிகள் சென்றிருக்கும். அந்தக் கிளைகளும் மிகவும் பருமனாக இருக்கும். அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான இரண்டாந்தரக் கிளைகள், அவற்றின் கிளைகள் என்று பரவியிருக்கும். 
இன்னொரு அதிசயமும் உண்டு
மரங்களில் கிளைகளில் Ferns என்று சொல்லப்படும் நூற்றுக்கணக்கான தாவரவகைகள் இருக்கும். பெரிய கிளைகளின் மீது பல நூறு ஆண்டுகளாக மக்கிப்போன இலைகள், கிளைகள், சருகுகள் என்று சேர்ந்து கிடக்கும். இவற்றை ஊட்டமாகக் கொண்டு அந்தக் கிளைகளின்மீதே இன்னும் பல மரங்கள் வளர்ந்திருக்கும். அந்த மரங்களிலும் பலவகையான சிறு மரங்கள், செடிகள் என்று லட்சக் கணக்கில் வளர்ந்திருக்கும். 
வெய்யிலுக்காகப் போட்டி போட்டுக்கொண்டு எல்லாமே உயரத்தைப் 
பிடிக்கப் பார்த்திருக்கும்.
மரங்களின் உச்சிகள் எல்லாம் சேர்ந்து விதானம்போல் தரையே 
தெரியாத வண்ணம் மூடியிருக்கும். இதை Canopy என்பார்கள்.
ஆள் நடமாட்டமே இல்லாத காடுகள். பல நூற்றாண்டு காலமாக 
மரங்களின் கேனொப்பியின் கீழே இலை தழை கொப்பு கொம்பு என்று 
விழுந்து அப்படியே மக்கிப்போயிருக்கும். அது சொதசொதப்புடன் ஒரு மாதிரி கள் வாடை அடித்தவாறு விளங்கும். மண் மாதிரி இருக்கும். இதன்மேல் மிதித்தால் இடுப்புவரைக்கும் அமிழச்செய்துவிடும். இதை Muck என்பார்கள்.
இந்த மாதிரி காடுகள்தாம் அந்தக் காலத்தில் இருந்தன. 
இவற்றில் இன்னும் சில மர்மங்களும் இருந்தன.....

       தரெங்காணு காடுகளைப் பற்றி கொஞ்சம் சொன்னேன்.
அந்த மாதிரியான காடுகள் - Verdant Tropical Jungles என்பவை தனி 
மாதிரியான Ecosystem. 
ஆனால் என்னுடைய கருத்தில் ஒவ்வொரு மரமும் ஒரு தனிப்பட்ட Ecosystemதான். ஒவ்வொரு மரத்திலும் ஆயிரக்கணக்கான ஜீவராசிகள்- 
பூச்சிகள், ஊர்வன, பறப்பன, மிருகங்கள், பூஞ்சைக்காளான்கள், பாசிகள், 
Ferns, ஒட்டுண்ணிகள் என்று ஒவ்வொரு மரமும் ஒரு தனிப் பிரபஞ்சம் - Cosmosதான்.
இந்த மாதிரியான காடுகளை வெட்டும்போது ஈடு செய்யமுடியாத 
நஷ்டம் இந்த உலகத்துக்கு ஏற்படுகிறது. சேதாரம் அதிகம். Wastage. 
ஒரு பெரிய மரத்தை வெட்டினால் அதன் நடுத்தண்டு மரத்தை மட்டும் வெட்டி எடுத்துகொள்வார்கள். மற்றபடிக்குக் கிளைகள், வேர்கள் எல்லாம் வெட்டிப் போடப்பட்டுவிடும். 



பாலாக் எனப்படும் மரங்கள்

ஒரு பெரிய மரத்தின் 10 சதவிகிதம் மட்டுமே இந்த Loggers-களால் 
எடுத்துக்கொள்ளப்படும். மீதி 90 சதவிகிதத்தை எரித்துவிடுவார்கள். 
இப்படிப்பட்ட எரிப்புகளால் மொத்த காடுகளுக்கும் பெரும் சேதம்.
காடுகளை வெட்டுவதால் ஆக்ஸிஜன் குறைகிறது. கார்பன் 
டையாக்ஸைட் கூடும். எரிப்பதால் இன்னும் அதிகமாக ஏற்படும். இந்தப் 
புகை நாடு முழுவதிலும் பரவும். 
Reforestation என்பது அறவே கிடையாது. புகை மூட்டத்தால் பல 
பெரிய நகரங்களில் மக்கள் மூச்சுவிடப் போராடுகிறார்கள். 
சாடாம் ஹ¤ஸைனைப் பற்றி ஜார்ஜ் புஷ் சொன்னமாதிரி, "He can hide. 
But he cant run". 
ஆனால் அதுகூட புகை மூட்டத்திடம் முடியாது. ஒளிந்துகொள்ளவும் 
முடியாது. ஓடவும் முடியாது. ஏனென்றால் இந்தப் புகை மூட்டம் ஒவ்வோர் ஆண்டும் நான்கைந்து மாதங்களுக்காவது நீக்கமற நிரம்பி நிற்கும்.


மாநகரத்தில் புகைமூட்டம்

நான் பார்த்த அந்த தரெங்காணு இப்போது இல்லை.
இன்னும் பல இடங்களில் காடுகளை வெட்டி அந்த இடத்தில் Oil Palm 
தோப்புகளை உருவாக்குகிறார்கள். பல இடங்களில் ரோடுகள் 
போட்டிருக்கிறார்கள். 
குவாலா பெராங் ஊர் இருக்கும் ஊலூ தரெங்காணு மாவட்டம் ஆயிரம் சதுர மைல்கள் கொண்டது. 
அதில் இப்போது கால்வாசி கென்யிர் ஏரியாக உருவாகி நீரில் 
மூழ்கிவிட்டது.


மூழ்கிக்கொண்டிருக்கும் கம்பங்கள்


புதிதாக 2007க்குப் பின் தோன்றிய கென்யிர் ஏரி

பல கோடிக்கணக்கான ஜீவராசிகள் அழிந்துபோயிருக்கும். 
அந்த பொன்மயமான நகாரா எமாஸ் நகரமும் அழிந்துபோயிருக்கலாம்.


காடுகளை வெட்டியபோது கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு புராதன கட்டடத்தின் சிதைவுகள்



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Monday, August 11, 2014

WARISAN JOURNAL


          WARISAN KELANTAN JOURNAL





WARISAN KELANTAN COVER PAGE REFLECTING KELANTANESE CULTURE.




FRONTISPIECE




PENINSULAR MALAYA





ஸ்ரீவிஜயத்தின் புராதன கரைகள். 


கோத்தாக் காப்புர் (கற்பூரக் கோட்டை) கல்வெட்டு.
புராதன பல்லவ கிரந்தம்
மொழி: சமஸ்கிருதமும் புராதன மலாயும்.
சக ஆண்டு 608
கிபி. 680.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Wednesday, May 28, 2014

TONGKANG

                            TONGKANG

தோணி என்னும் சிறு கப்பல்கள்



என் தந்தையார் எஸ்.கே.எஸ் சின்னமுத்து பிள்ளையவர்கள் மேடான் நகர் மோஸ்க்கீ ஸ்த்ராட், நான்காம் நம்பருக்கு முழு முதலாளியாக இருந்ததால் கிட்டங்கி ஸிஸ்டம் அங்கு கடைபிடிக்கப் படவில்லை. அங்கு 1936க்குப்  பின்னர் இருந்தவர்கள் எல்லாம் என் தந்தையாரின் உறவினர்களும் ஊர்க்காரர்களும்தான். 
தந்தையார் 1936க்கு முன்னாலேயே பினாங்கில் பிஷப் ஸ்ட் ரீட்டில் 
முப்பதொன்றாம் நம்பரை வாடகைக்கு எடுத்திருந்தார். அதுவும் ஒரு மிக 
நீளமான அகலமான ஷாப் ஹவுஸ்தான். மாடியும் இருந்தது.
இந்தக் கட்டடத்தில் பெரும்பகுதி கோடவுனாக இருந்தது. ஹோல்ஸேல் 
ரீட்டேய்ல் விற்று வரவும் இருந்தது. 
அப்பாவுக்கு நான்கைந்து வகை பிஸினஸ்கள். லேவாதேவி மார்க்காக்களே  ஆறு இருந்தன. 
அவைபோக ஏற்றுமதி இறக்குமதி இருந்தது. சுமாத்ராவில் ஏராளமாக 
சாம்பிராணி, ஏலம், கிராம்பு, லவங்கப்பட்டை, தாளிசபத்திரி, மிளகு, இன்னும் சில மருந்துப்பொருட்கள், ஆமை ஓடு, முதலை எண்ணெய், மான் கொம்பு, மர்க்கீஷாப் பழம் போன்றவற்றை வாங்கி நாலாம் நம்பரில் வைத்திருந்து, அவற்றைச் சிப்பம் என்னும் பேல்களில் கட்டி, அவற்றை மேடானிலிருந்து இருபத்து நான்கு மைல் தூரத்திலிருந்த பெலாவான் என்னும் துறைமுகத்தில் தொங்க்காங் என்னும் சிறு கப்பல்களில் ஏற்றி பினாங்குக்கு அனுப்புவார்கள். 
தொங்காங்க் என்பனவற்றைத் தமிழர்கள் தொங்கான் என்று 
குறிப்பிடுவார்கள். ஒற்றைப் பாய்மரம் நடுவிலும் முகப்பில் இன்னொரு பாய் 
பின்னால் சிறிய பாயும் இருக்கும்.
பெலாவானின் நேர் வடக்கே கடல் கடந்து நூற்றைம்பது மைல் தூரத்தில் பினாங்கு இருந்தது. அங்குள்ள ஸ்வெட்டென்ஹாம் பியர் என்னும் துறையில் தொங்கான் வந்தணையும். அங்கிருந்து நடைதூரம்தான் - பிஷப் ஸ்திரீட் முப்பத்தொண்ணாம் நம்பர்.
பினங்கில் சிப்பம்கள் பிரிக்கப்பட்டு, சரக்குகள் தேவைக்கேற்ப வேறு சிப்பங்களாகக் கட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும். அங்கு 
சித்தார்கோட்டை பி அஹ்மட் அண் ஸன்ஸ் தம்பு செட்டித் தெருவில் 
வைத்திருந்த கொடவுனுக்குச் சென்று விடும். 
மதராஸிலிருந்து பளையகாட் கைலிகள், மல் வேட்டி, குண்டஞ்சு நாலு முழ வேட்டி, சேலைகள் தஞ்சாவூர் அபிரஹாம் பண்டிதர் தயாரித்த 
கருணானந்தர் மூலிகை மருந்துகள் போன்றவை பினாங்குக்கு அனுப்பப் படும். 
அங்கிருந்து மேடானுக்கு வந்து சேரும்.
1927-இல் மேடான் சென்றவர் 1937-இல் ஒரு மில்லியனேராக இருந்தார். 
தங்கக் காசுகள் பரிவர்த்தனை வேறு இருந்தது. 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Sunday, May 25, 2014

PANCHA LOGAM STATUE


PANCHA LOGAM STATUE





RAJA RAJA CHOLZA I AND CONSORT

In the ancient times, it was customary to group things together in certain numbers. 
To give some examples - thiri kadugam - 3 types of certain spices - dried ginger, pepper, and thippili. In Tamil, it is known as chukku, miLagu, thippili. 
Pancha muulam refers to 5 types of roots. 
Nava Bhashanam is 9 types of mineral poisons. 
Why cant there be more or less? I would'nt know. I did not group them. Only the ancient Tamils know. 
The Tamil craft of statutary deals with metallic statues which are known as bronzes. 
In Tamil, they are known as Pancha Loga Vigrahas. 
And in Malaysia, the people are made to beleive that these statues are made of an alloy of 5 metals containing a lot of gold and silver.
This is not true. 
They never contain any gold. 

Normally, according to a certain book called Thogai Akaraadhi or Thogai nuul, the term 'Pancha Logam' stands for Iron, Copper, Tin, Silver, and Gold.
But the 'Pancha Logam' in Shilpa Sastra or the craft of making statues means something different. 
A Pancha Loga statue which is commonly known as Bronze statue is made from an alloy containing Copper, Tin, Lead, Silver, and traces of Arsenic. Copper is the main component. It makes up 90 %. Silver is very little. 
There wont be any gold.
The world famous Cholza Bronzes have been chemically analysed and found not to contain any gold. 
Even now, no Pancha Logam statue contains any Gold. 
The temple authorities do not know anything about Ancient Indian Metallurgy. Usually they are misled and they, in turn, mislead common people - especially the rich people who donate lavishly.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Sunday, March 2, 2014

VEXING TAXING TAXATION


VEXING TAXING TAXATION

FROM AGATHIYAR YAHOO GROUP


For the past many centuries, all the social laws, traditions, justice etc., were drawn up according to these 'Needhi' books. 

VijayaNagara Empire flourished from 1336 AD and lasted until the rule of the Araveedu dynasty when it was destroyed 
to a great extent.
During its hey-day, there was a lot of taxation upon the 
peasants and farmers.
This was drawn out according to the Parasara Needhi Sastra.

A 'Gutti' or 'Guddi' is a certain measurement of area. 
It is supposed to produce thirty gunny sacks of sixty padi measures of paddy. This is an estimate. 

In those days, the land belonged to somebody.
The total harvested paddy was taken. One quarter of the harvest was taken by the land-owner. The farmer took half. 
The government took away one-sixth of the produce. The temples took away one in thirty parts. The Brahmins took one-twentieth of the paddy. 

On many occassions, the government would take away one-third. It depends on whether there is a war on. Or there was recruitment of soldiers. Or there might be a military campaign.
According to the circumstances, the government might even take away half of the produce.

Many a times, there will be wars. During such wars, territories might change hands rapidly. Under such circumstances whoever comes and goes will take away whatever the people have produced.

Apart from these, there was this system called
 'Magamai'. 
There were certain classes of people following certain professions or providing certain services to the society. 
Poets, teachers, washermen, barbers, Prohithar, astrologer, 
physician, mid-wife, territorial guardians, police, village chieftain, village accountant and such like. 
According to the size of their land, each land-lord would measure out the paddy and give it to each of these class of people. 

This is known as 'aLandhu pOduthal' or 'padiyaLaththal'. 
They are delivered in containers called potti or kottaans made of palmyra leaves. That is the measurement.

The agriculture tax levied by the government of Vijayanagar was - hold your breaths - catch on to something - 
now here it comes.....
Eighty-one crore varahans worth per year.
That would be eight hundred and ten million varahans.

Now, a varahan is a gold coin which is 3 grams in weight of a purity of 800. We are now using 916. 
It would be worth 4500 Rupees at the present market rate.
One hundred years ago, it was worth 3.5 silver rupees. 

Vijayanagar Empire was not structured like the  
medieval Cholza or Pandya empires or the Pallava Pandya 
empires before them or the three kingdoms and the feudatories 
of the Sangam Age.

It was totally different.
Something like over-lord and war-lords/barons system found in Norman England. 
Who copied from whom......
Well, thats a million dollar question.

Vijayanagar was based on a militaristic feudalistic system. 
The whole empire was divided into small holdings which were parcelled out to war-lords. These were under bigger 
war-lords called Nayaks who were under a MandalEswara. Mandaleswaras were under the emperor.

These war-lords were needed to maintain armies and 
hold the country firmly within their grasp. They were supposed provide the central government with so many so many soldiers, 
so many so many horses and so many so many elephants. And 
of course so many so many varahans every year.
The minor war-lords became the Palayakaarars or Polygars and later on the zamindars.
Their over-lords became the Nayak kings of Thanjavur, Madurai and Ikkeri. 

The polygars alone paid up sixty lakhs - six million varahans per annum to the central government. They sent only 
the remainder after deducting their own expenses and the army expenses. 

The Battle of Talikota(ThalaikkOttai) marked the beginning of the end of Vijayanagar. 
The territories of the empire shrunk. The loss of the most productive and fertile territories like the Raichur Doab took a very heavy toll on the empire.
Krishna Deva Rayar was the greatest emperor of Vijayanagar. 
His brother's son Sadhasiva Rayar was ruling after the 
Talikota Battle. 
During his rule, the income of the empire was a mere 
twelve crore varahans. That would be One hundred and twenty million varahans.
That was still a lot of money.

The government collected its agriculture tax as paddy or money. Collection as money was known as 'kaasaayam' 
and collection in the form of paddy was 'nellaayam'.

Taxation in the PudukOttai Samasthanam - 

KuRuvai paddy of the rainy season - one-third 
Sesame, Millet, Horse gram, Green gram, beans, etc., - one quarter part.
Other cereals like Varagu, saamai, Kambu, etc - one sixth.

Apart from these, there were other types of taxes on 
agriculture lands.
What would have remained for the poor vivasayi peasant?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, January 12, 2014

BLUE GEMS IN KADARAM


நீலமணியின் நீண்ட கதை

கடாரம்



கொங்குநாட்டு நீலமணிகள்


அரிக்கமேடு




நீலமணி கண்ட கோவா பெண்மணி

இப்போதெல்லாம் சில ஆண்டுகளாகக் கடாரச் சின்னங்கள் மியூசீயத்துக்குச்செல்பவர்கள் கூட்டம் அதிகமாகிவருகிறது. 
வருகிறவர்களில் பலர் இரண்டு மூன்று பஸ்களில் வருகிறார்கள். அதுவோ சிறிய இடம். ஒரே சமயத்தில் எண்பது பேர் உள்ளே நுழைந்து பார்த்து என்னத்தை அறிந்துகொள்ளப்போகிறார்கள்? 
முதலில் விஷய ஞானம் உள்ளவர்கள் உடன் இருத்தல் மிகவும் அவசியம். அவர்கள் மியூஸீயத்தில் இருக்கும் அரும்பொருட்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லி விளக்கங்கள் கொடுக்கவேண்டும். 
அந்த மியூஸீயத்தில் இந்து சமயம், பௌத்த சமயம் ஆகியவை சம்பந்தப்பட்ட சின்னங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் பின்னணிகள் இருக்கும். 
         ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மணிக்கற்களை அந்த வட்டாரத்தில் எடுத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைச் சிறிய பாலிதீன் பைகளில் போட்டு வைத்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் போகிற போக்கில் சற்று எட்டத்தில் இருந்து நகர்ந்தவாக்கில் பார்ப்பார்கள்; அல்லது பார்க்காமல் சென்றுவிடுவார்கள். 
அந்தக் கற்களில் பல மாதிரி உண்டு. அவற்றில் குறிப்பாகச் சொல்லப் 
போனால் சில நீலமணிக் கற்கள் இருக்கின்றன. அவற்றை Corundum 
கொருண்டம் என்று இங்கிலீஷில் குறிப்பிடுவார்கள். 
அந்தக் கற்களைத் தமிழில் குருந்தக் கல் என்று குறிப்பிடுகிறோம். 
அந்த வகைக் கற்கள் கொங்குநாட்டுப் பகுதியில் ஒரு மலையில் கிடைக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே யவனர்கள் அந்தக் குருந்தக் கற்களை மிகுதியாக வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
12-03-2000த்தில் கடாரம் சம்பந்தமாக டாக்குமெண்டரி எடுப்பதற்காக 
கோவாக்காரப் பெண்மணி ஒருவரின் தலைமையில் ஒரு குழு வந்திருந்தது. 
சிங்கப்பூர் அரசுக்காக அந்த டாக்குமெண்டரி எடுக்கப்பட்டது. 
என்னைச் சந்திக்குமாறு சிங்கப்பூரில் யாரோ சொல்லி அனுப்பியிருந்தார்கள். 
பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
மியூஸீயத்தில் அந்த கோவாப் பெண் நீலமணிக் கற்களையே பார்த்தவாறு நின்றிருந்தார். 
நான் அந்தக் கற்களைப் பற்றி சொல்லி கொங்குநாட்டு நீலமலையைப் பற்றியும் சொல்லிக்கொண்டு வந்தேன். அங்கு மட்டும்தான் அந்தக் கற்கள் விளைந்தன.
அந்தப் பெண் கவனமாகக்கேட்டுவிட்டு, "நான் இதே கற்களை 
அரிக்கமேட்டில் பார்த்திருக்கிறேன்", என்றார். அங்கும் டாக்குமெண்டரி 
எடுத்திருக்கிறார்கள்.
அரிக்கமேடு என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த பெரிய பட்டினம். அங்கு யவனர் குடியிருப்பு, வர்த்தகமையம் ஆகியவை இருந்தன. யவனர்கள் அரிக்கமேட்டை 'பொதுக்கே' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 
கடாரத்துக்கும் அந்த நீலமணிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
அவைதாம் மற்ற சிறு சிறு மணிக் கற்களுடன் அந்தப் பாலிதீன் பைகளில் கலந்து இருந்தன. 
பாருங்கள்......
ஒரே ஒரு அயிட்டம். சின்னஞ்சிறு கற்கள். ஒதுக்குப் புறமாய்க் கலந்து கிடந்தன.
ஆனால் அவற்றில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. 
அதனால்தான் சொன்னேன்......
விஷயம் தெரிந்தவர்களை அங்குக் கூட்டிச்சென்று விளக்கம் பெறவேண்டும். 
இல்லையென்றால் நேரத்துக்கும் பெட்ரோலுக்கும் பிடித்த கேடு என்று ஆகிறது.