ULU TRENGGAANU
இவ்வளவு சிரமப்பட்டும் தேடியது ஏது கிடைக்கவில்லை என்ற
ஆதங்கம் கொஞ்சம்கூட இருக்கவில்லை.
தரெங்காணு ஆறு குவால பெராங்கிலிருந்து மேற்கே செல்லும்.
இன்னொரு பெரும் கிளை வடக்கே செல்லும். வடக்கே செல்லும்
கிளையின் கரையில்தான் அந்த புக்கிட் கப்பால் என்னும் இடமும்
இருக்கிறது.
இப்போது இருப்பது போல ஜியாக்ர·பி, ஜியோமார்·பாலஜி போன்றவை
அந்தக் காலத்தில் இருக்கவில்லை. மாறியிருந்தன.
பல காரணங்கள்.
அடிக்கடி காடு, காடு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
இந்தக் காடுகள் சாதாரணக் காடுகள் இல்லை.
Tropical Jungles, Verdant Jungles என்னும் வகையைச் சேர்ந்தவை.
மரங்கள் மிகவும் பருமனாகவும் மிக உயரமாகவும் இருக்கும். கிளைகள் மிக முரடாக அகன்று, விரிந்து பல அடிகள் சென்றிருக்கும். அந்தக் கிளைகளும் மிகவும் பருமனாக இருக்கும். அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான இரண்டாந்தரக் கிளைகள், அவற்றின் கிளைகள் என்று பரவியிருக்கும்.
இன்னொரு அதிசயமும் உண்டு
மரங்களில் கிளைகளில் Ferns என்று சொல்லப்படும் நூற்றுக்கணக்கான தாவரவகைகள் இருக்கும். பெரிய கிளைகளின் மீது பல நூறு ஆண்டுகளாக மக்கிப்போன இலைகள், கிளைகள், சருகுகள் என்று சேர்ந்து கிடக்கும். இவற்றை ஊட்டமாகக் கொண்டு அந்தக் கிளைகளின்மீதே இன்னும் பல மரங்கள் வளர்ந்திருக்கும். அந்த மரங்களிலும் பலவகையான சிறு மரங்கள், செடிகள் என்று லட்சக் கணக்கில் வளர்ந்திருக்கும்.
வெய்யிலுக்காகப் போட்டி போட்டுக்கொண்டு எல்லாமே உயரத்தைப்
பிடிக்கப் பார்த்திருக்கும்.
மரங்களின் உச்சிகள் எல்லாம் சேர்ந்து விதானம்போல் தரையே
தெரியாத வண்ணம் மூடியிருக்கும். இதை Canopy என்பார்கள்.
ஆள் நடமாட்டமே இல்லாத காடுகள். பல நூற்றாண்டு காலமாக
மரங்களின் கேனொப்பியின் கீழே இலை தழை கொப்பு கொம்பு என்று
விழுந்து அப்படியே மக்கிப்போயிருக்கும். அது சொதசொதப்புடன் ஒரு மாதிரி கள் வாடை அடித்தவாறு விளங்கும். மண் மாதிரி இருக்கும். இதன்மேல் மிதித்தால் இடுப்புவரைக்கும் அமிழச்செய்துவிடும். இதை Muck என்பார்கள்.
இந்த மாதிரி காடுகள்தாம் அந்தக் காலத்தில் இருந்தன.
இவற்றில் இன்னும் சில மர்மங்களும் இருந்தன.....
தரெங்காணு காடுகளைப் பற்றி கொஞ்சம் சொன்னேன்.
அந்த மாதிரியான காடுகள் - Verdant Tropical Jungles என்பவை தனி
மாதிரியான Ecosystem.
ஆனால் என்னுடைய கருத்தில் ஒவ்வொரு மரமும் ஒரு தனிப்பட்ட Ecosystemதான். ஒவ்வொரு மரத்திலும் ஆயிரக்கணக்கான ஜீவராசிகள்-
பூச்சிகள், ஊர்வன, பறப்பன, மிருகங்கள், பூஞ்சைக்காளான்கள், பாசிகள்,
Ferns, ஒட்டுண்ணிகள் என்று ஒவ்வொரு மரமும் ஒரு தனிப் பிரபஞ்சம் - Cosmosதான்.
இந்த மாதிரியான காடுகளை வெட்டும்போது ஈடு செய்யமுடியாத
நஷ்டம் இந்த உலகத்துக்கு ஏற்படுகிறது. சேதாரம் அதிகம். Wastage.
ஒரு பெரிய மரத்தை வெட்டினால் அதன் நடுத்தண்டு மரத்தை மட்டும் வெட்டி எடுத்துகொள்வார்கள். மற்றபடிக்குக் கிளைகள், வேர்கள் எல்லாம் வெட்டிப் போடப்பட்டுவிடும்.
பாலாக் எனப்படும் மரங்கள்
ஒரு பெரிய மரத்தின் 10 சதவிகிதம் மட்டுமே இந்த Loggers-களால்
எடுத்துக்கொள்ளப்படும். மீதி 90 சதவிகிதத்தை எரித்துவிடுவார்கள்.
இப்படிப்பட்ட எரிப்புகளால் மொத்த காடுகளுக்கும் பெரும் சேதம்.
காடுகளை வெட்டுவதால் ஆக்ஸிஜன் குறைகிறது. கார்பன்
டையாக்ஸைட் கூடும். எரிப்பதால் இன்னும் அதிகமாக ஏற்படும். இந்தப்
புகை நாடு முழுவதிலும் பரவும்.
Reforestation என்பது அறவே கிடையாது. புகை மூட்டத்தால் பல
பெரிய நகரங்களில் மக்கள் மூச்சுவிடப் போராடுகிறார்கள்.
சாடாம் ஹ¤ஸைனைப் பற்றி ஜார்ஜ் புஷ் சொன்னமாதிரி, "He can hide.
But he cant run".
ஆனால் அதுகூட புகை மூட்டத்திடம் முடியாது. ஒளிந்துகொள்ளவும்
முடியாது. ஓடவும் முடியாது. ஏனென்றால் இந்தப் புகை மூட்டம் ஒவ்வோர் ஆண்டும் நான்கைந்து மாதங்களுக்காவது நீக்கமற நிரம்பி நிற்கும்.
மாநகரத்தில் புகைமூட்டம்
நான் பார்த்த அந்த தரெங்காணு இப்போது இல்லை.
இன்னும் பல இடங்களில் காடுகளை வெட்டி அந்த இடத்தில் Oil Palm
தோப்புகளை உருவாக்குகிறார்கள். பல இடங்களில் ரோடுகள்
போட்டிருக்கிறார்கள்.
குவாலா பெராங் ஊர் இருக்கும் ஊலூ தரெங்காணு மாவட்டம் ஆயிரம் சதுர மைல்கள் கொண்டது.
அதில் இப்போது கால்வாசி கென்யிர் ஏரியாக உருவாகி நீரில்
மூழ்கிவிட்டது.
மூழ்கிக்கொண்டிருக்கும் கம்பங்கள்
புதிதாக 2007க்குப் பின் தோன்றிய கென்யிர் ஏரி
பல கோடிக்கணக்கான ஜீவராசிகள் அழிந்துபோயிருக்கும்.
அந்த பொன்மயமான நகாரா எமாஸ் நகரமும் அழிந்துபோயிருக்கலாம்.
காடுகளை வெட்டியபோது கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு புராதன கட்டடத்தின் சிதைவுகள்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment