Saturday, August 30, 2014

ARCHEOLOGY-U.TRGN

ARCHEOLOGICAL REMNANTS IN ULU TRENGGANU




ஊலூ தரெங்காணு மாவட்டத்துக் காடுகளில் எங்கோ ஓரிடத்தில் பொன் மயமான நகாரா எமாஸ் என்னும் நகரம் இருந்தது என்பது ஒரு கர்ண
பரம்பரைச் செய்தி. கிட்டத்தட்ட அது இன்ன இடத்தில்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தேன். அதன் நிமித்தமே படகில் 
சுங்கை தரெங்காணு ஆற்றின் உட்புறமாகச் சென்றது. அப்போது அந்த 
குத்துக் கற்பாறைகள் மேலும் செல்வதைத் தடுத்தன. 
புக்கிட் கப்பல் என்னும் இடமும் அந்த ஆற்றின் கிளை நதிகளில் 
ஒன்றை ஒட்டித்தான் இருந்தது. 
இப்போது ஊலு தரெங்காணுவின் கால்வாசி நிலம் ஒரு செயற்கை 
ஏரிக்குள் மூழ்கிக் கிடக்கிறது. 
கென்யிர் என்னும் அந்த ஏரிதான் தென்கிழக்காசியாவிலேயே மிகப் 
பெரிய செயற்கை ஏரி.
அதைக் கட்டுவதற்காகக் காடுகளை அழித்த போது ஓரிடத்தில் 
புராதனக் கட்டடச் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ஆனால் அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை. தகவல்களையும் 
வெளியிடவில்லை. அந்த நகாரா எமாஸ் நகரின் எச்சங்கள் இவை 
என்று தீர்மானிக்க இயலவில்லை. 
இப்போது சுத்தமான ஏரியல் ·போட்டிகிரா·பி, ஸாட்டலைட் 
இமேஜ் ஸ்டடி, ரிமோட் ஸென்ஸிங் போன்ற டெக்னாலஜியை வைத்து 
ஆராய முயற்சிக்கலாம். 
அங்க்கோர் வாட் பிரதேசத்திலும் இந்த மாதிரி ஆய்வுகள், எக்ஸ் ரேய், 
ராடார் முதலியவை உட்பட்ட பல வித டெக்னாலஜிகளைப் பயன்படுத்திப் 
பார்த்தார்கள். இப்போது நமக்குத் தெரியும் அங்க்கோர் போல இன்னும் 
நான்கு மடங்கு அளவுக்கு அந்த நகரம் பரவியிருந்ததைக் கண்டு
பிடித்துள்ளார்கள்.
ஆனால் மலேசியாவில்?
இந்த நகாரா எமாஸ¤ம் இன்னொரும் கோத்தா கெலாங்கியாக 
ஆக்கப்படும். கோத்தா கெலாங்கி?
கீழ்க்கண்ட லின்க்கில் பார்க்கவும் - 


எந்தப் பாதையில் அந்த நகாரா எமாஸ் நகரத்துக்குப் போயிருப்பார்கள்? இது இன்னொரு மர்மம். அதற்கும் ஏதோ ஒரு விடுப்பு கிடைத்தது. ஆனால் 
அப்போது அல்ல.
இன்னொரு சமயம். வேறோர் இடத்தில்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. அருமையான பதிவு..திட்டமிட்டே சில வரலாறுகளும் ஆவணங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இங்கு மட்டுமல்ல..எங்குமே தமிழனுக்கு இந்தக் கதிதான்.

    ReplyDelete