Friday, January 16, 2015
ABOUT BODHIDHARMA 2
X-Received: (qmail 82584 invoked from network); 19 Jul 2008 00:30:32 -0000
X-Received: from unknown (66.218.67.95) by m47.grp.scd.yahoo.com with QMQP; 19
Jul 2008 00:30:32 -0000
X-Received: from unknown (HELO n42c.bullet.mail.sp1.yahoo.com) (66.163.168.176)
by mta16.grp.scd.yahoo.com with SMTP; 19 Jul 2008 00:30:32 -0000
X-Received: from [216.252.122.216] by n42.bullet.mail.sp1.yahoo.com with NNFMP;
19 Jul 2008 00:30:32 -0000
X-Received: from [66.218.69.6] by t1.bullet.sp1.yahoo.com with NNFMP; 19 Jul
2008 00:30:32 -0000
X-Received: from [66.218.66.92] by t6.bullet.scd.yahoo.com with NNFMP; 19 Jul
2008 00:30:32 -0000
Date: Sat, 19 Jul 2008 00:30:32 +0000
From: jaybee555 <jaybee555@yahoo.com>
Subject: [agathiyar] Tea Mystery? (tscii)
X-Originating-IP: 66.163.168.176
Sender: agathiyar@yahoogroups.com
X-Sender: jaybee555@yahoo.com
To: agathiyar@yahoogroups.com
Reply-to: agathiyar@yahoogroups.com
X-Mailer: Yahoo Groups Message Poster
Delivered-to: mailing list agathiyar@yahoogroups.com
Comment: DomainKeys? See http://antispam.yahoo.com/domainkeys
DomainKey-Signature: a=rsa-sha1; q=dns; c=nofws; s=lima; d=yahoogroups.com;
b=PyTC5J8A+pgguMXfmKx1UQtuV+8LwmfSGKxp6C1k1jyLi0PkS9vnSZiTdWPq5otoqQjPuiWOH58tRFyOkeFEJwsV42LYpRsMYn3FYUHT22xqa7IvJREjHJdFNO0/BvrF;
X-Yahoo-Newman-Id: 1024082-m45308
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
X-eGroups-Msg-Info: 1:6:0:0:0
X-Yahoo-Post-IP: 218.111.69.97
X-Yahoo-Profile: jaybee555
X-eGroups-Approved-By: jaybee555 <jaybee555@yahoo.com> via web; 19 Jul 2008
00:31:36 -0000
X-Yahoo-Newman-Property: groups-email-tradt-m
X-Scanner-mx2:
Mailing-List: list agathiyar@yahoogroups.com; contact
agathiyar-owner@yahoogroups.com
List-Unsubscribe: <mailto:agathiyar-unsubscribe@yahoogroups.com>
List-Id: <agathiyar.yahoogroups.com>
User-Agent: eGroups-EW/0.82
Original-recipient: rfc822;jaybee@tm.net.my
அன்பர்களே,
பழங்காலத்தில் சீனாவிலிருந்து பலவகையான
சரக்குகளைத் தமிழர்கள் வாங்கினார்கள். அவற்றில்
சிலவறைப் பற்றி தெரிகின்றது. பெயர்களிலிருந்துகூட
அறியலாம். சீனாக்காரம், சீனாக்கற்கண்டு, சீனிவெடி,
சீனிச் சர்க்கரை என்று சில பெயர்கள் இன்றும்
வழங்கப்படு வருகின்றன.
சீனாவின் மிக முக்கியப் பொருள்களில் ஒன்று
டீ எனப்படும் தேயிலை.
Teh என்பதுதான் அந்த மூலிகையின் பெயர்.
அதை ஆங்கிலத்தில் எழுதும்போது Tea என்று எழுதினார்கள்.
Bear என்ற சொல்லில் வரும் 'ea'-யில் உச்சரிப்பை வைத்து
அப்படி எழுதினார்கள். ஆனால் பிற்காலத்தில் Sea -யில்
வருவதுபோன்று உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிலிருந்து அது டீ-யாக உச்சரிக்கப்பட்டுவிட்டது.
ஈராயிரம் ஆண்டுகளாகச் சீனாவில் டீ புழக்கத்தில்
இருப்பதாகச்சொல்வார்கள். ஒரு பௌத்த பிக்குவின்
கண் இரப்பைகள்தான் தேயிலையாக மாறியதாக
ஒரு மரபுக்கதை இருக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மர்தான்
அந்த பௌத்தபிக்கு என்றும் சிலர் சொல்வார்கள்.
சோம்பலை நீக்கி, புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும்
ஏற்படுத்தும் பானமாகவும், சிறுநீரைப் பெருகச் செய்து, உடலின்
கழிவுப் பொருள்களை விரைவாக அகற்ற உதவும் முலிகையாகவும்
சீனர்கள் அதைப் பயன்படுத்தினார்கள்.
அப்படிப்பட்ட அரிய பானம்-மூலிகை தமிழ்நாட்டுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கவேண்டும்.
செய்யப்பட்டதா?
தெரியவில்லை.
செய்யப்படவில்லையென்றால்,
ஏனில்லை?
ஏதாவது Embargo போன்ற ஏற்றுமதித் தடைகளைச்
சீனர்கள் விதித்திருந்தனரா? பேப்பர், அச்சிடுதல், கருமருந்து
ஆகியவற்றை அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். ஆனால் அவை
சீனாவை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காகத் தடை
விதித்திருந்தனர்.
நாம் அறிந்தவரையில் தேயிலையை ஆங்கிலேயர்கள்
தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தார்கள். அவர்களே தேயிலை
எஸ்ட்டேட்டுகளை ஏற்படுத்தினார்கள்.
அதற்கும் முன்பே தேயிலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு
வரப்பட்டதா?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் க்வாங்டுங்
நகரம், காண்ட்டன் நகரம் ஆகிய இடங்களிலெல்லாம் தமிழர்கள்
வசித்துவந்தனர். கோயில்கள் கட்டிக் கொண்டு வாழ்ந்திருந்தனர்.
அவர்களுக்கு நிச்சயம் தேயிலையைப் பற்றி தெரிந்திருக்கும்.
ஒருவேளை வேறொரு பெயரில் தேயிலை தமிழ்நாட்டுக்கு
வந்ததா?
அன்புடன்
ஜெயபாரதி
=========================
சரி.....இப்போது அடுத்த கதை......
இதைத்தான் பௌத்தர்கள் mind-fullness என்று சொல்வார்கள்.
இதற்கு ஏதாவது சொல்லை அந்தக் காலத்தில் தமிழில் பௌத்தர்கள்
வைத்திருந்திருப்பார்கள். ஒரு காலத்தில் பௌத்தர்கள் ஏராளமானோர்
தமிழர்களிடையே இருந்திருக்கின்றன. அவர்களின் சில நூல்களும்
புத்தர் சிலைகளும் மற்ற தெய்வச்சிலைகளும் இன்றும் இருக்கின்றன.
எத்தனையோ தெய்வங்களை இந்து சமயத்துக்கு நம்ம ஆட்கள் மாற்றி
விட்டிருக்கிறார்கள். எத்தனையோ நூல்களை அழித்திருக்கிறார்கள்.
Mindfullness என்பதற்கும் நிச்சயம் சொல் இருந்திருக்கும்.
புத்தமித்திரர், போதிதர்மர், வஜ்ரபோதி, சீத்தலைச்சாத்தனர் போன்றவர்கள்
தமிழர்கள். அவர்களில் முதல்மூவரும் உலகப்புகழ் பெற்றவர்கள்.
சீனா, ஜப்பான், கொரியா, தென் கிழக்காசியா ஆகிய இடங்களில்
புத்த மதம் பரவ காரணமாக இருந்தவர்கள்.
பௌத்த தர்மத்தைச்சேர்ந்த சொற்றொடர்கள் முதலியவை
ஏராளமாக இருந்திருக்கவேண்டும்.
ஆனால் இப்போது அவற்றைக் காணமுடிவதில்லை.
Expurgation என்றொரு சொல் உண்டு.
சுவடுகூட இல்லாமல் அறவே நீக்குவது.
இந்தக் காரியத்தை நம்ம ஆட்கள் - சைவர், ஸ்மார்த்தர், வைணவர்...
எல்லாருமே மிகத்திறமையாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.
ஆகையால்தான் பௌத்தர்களின் மூல நூலாகக் கருதப்படும்
தம்மபாதாவின் தமிழ்வடிவமோ, அல்லது அதன் வழிநூல்களோ இன்றுவரைக்கும்
கிடைக்கவில்லை. நான் குறிப்பிடுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னால் சீத்தலைச்சாத்தனார் அவர் படித்த பள்ளியில் அவர் கற்ற
தமிழ் தம்மபாதாவை.
அந்தச் சமயமும் அடியோடு இல்லாமற்போனதோடு அதன்
நூல்களையும் சமயசம்பந்தப்பட்ட சொற்களையும்கூட ஒழித்துக்கட்டி
யிருக்கிறோம். இப்போது நம்மிடம் இருக்கும் மணிமேகலை, நீலகேசி,
சில இலக்கண நூல்கள் முதலியவற்றைத் தவிர அடிப்படையான
ஆதாரநூல்கள் முக்கியநூல்கள் இல்லையல்லவா.
இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும்.
தக்கயாகப் பரணியைத் தொட்டு ஆரம்பித்து எழுதவேண்டும்.
அடுத்த கதையைச்சொல்கிறேன்....
அன்புடன்
ஜெயபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment