Date: Fri, 21 Oct 2005 23:01:06 +0000
From: JayBee <jaybee@tm.net.my>
Subject: BodhiDharma antique statue
X-Sender: jaybee@pop.tm.net.my (Unverified)
To: Arun Krishnan <drarunkrishnan@gmail.com>,
"Ananthanarayanan, Vettai" <ananth@mcmaster.ca>,
"poo@giasmd01.vsnl.net.in" <poo@giasmd01.vsnl.net.in>,
"S. Anandanatarajan" <s.anandanatarajan@gmail.com>,
Siva Chinnasamy <schinnas@yahoo.com>,
Sivapathasekaran <sps10142004@yahoo.co.in>,
Srikanth K <k_sreekanth_in@yahoo.com>, Suganya <suganya_ml@yahoo.com>,
Swetha Sampath <sswetha_2000@yahoo.com>,
Vidya Ramakrishnan <ssankaran384@yahoo.com>
Cc: JayBee <jaybee@tm.net.my>
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
X-Virus-Scanned: by Barracuda Spam Firewall Outbound at tm.net.my
X-Virus-Scanned: by Spam Firewall 5 For Inbound at tm.net.my
Original-recipient: rfc822;jaybee@tm.net.my
Dear Friends,
There is large life-size wooden statue of Bodhi Dharma
in an antique shop in Kuala Lumpur.
See it in the picture.
Unlike the other Chinese statues, his eyes, nose, etc are
large and his beard is curled. That is the Ancient Chinese depiction
of a Tamil.
Regards
JayBee
)
Date: Wed, 07 Aug 2002 18:08:12 +0800
Subject: Some more Bodhi Dharma - Re: Bodhi Dharma and others #2 - Re:
[agathiyar] Re: KELvigaL - #1
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020807180812.00775960@pop.tm.net.my>
From: JayBee <jaybee@tm.net.my>
At 04:34 PM 8/6/02 +0800, JayBee wrote:
>
> போதி தர்மரைப் பற்றி வேறு சில வரலாறுகளும் இருக்கின்றன.
ஷாஓலின் மரபில் போதிதர்மரைப்பற்றி சில விபரங்கள் வித்தியாசப்
படுகின்றன.
அவர் குங்க் ·புவைக் கண்டுபிடித்தவர் என்று பெரும்பாலும்
ஒப்புக்கொள்வார்கள். குங்க் ·பூ சீனாவில் 3000 ஆண்டுகளுக்கு
முன்பே இருந்ததாகவும், போதிதர்மர் அதில் சில புதிய உத்திகளைச்
சேர்த்தார் என்றும் சொல்வார்கள்.
போர் உத்திகள் அவருக்குத் தெரிந்திருந்ததற்கும் காரணம்
சொல்கிறார்கள். அவர் அரசவம்சம் ஒன்றைச்சேர்ந்தவர் என்றும்,
இளைஞராக இருந்தபோது அரண்மனையைவிட்டு வெளியேறி பௌத்த
சமயத்தில் சேர்ந்ததாகவும், அன்றைய பௌத்தத்தில் இருந்த
உட்பிரிவு ஒன்றைச் சார்ந்திருந்ததாகவும், அந்த உட்பிரிவின்
கோட்பாடுகளுக்கு இந்தியாவில் மதிப்பு இல்லாதிருந்ததால்,
நலாந்தாவிலிருந்து இமயமலையை கால்நடையாகவே தாண்டித்
திபேத்துக்குச் சென்று, அங்கிருந்து மலைகளைக் கடந்து சீனாவுக்குச்
சென்றுவிட்டதாகவும் சொல்வார்கள். அவர் வருகிறார் என்ற செய்தியை
அறிந்த மன்னன் எதிர்கொண்டழைக்க வந்ததாகவும், அப்போது
அவர் காலில் ஒரு பாதுகையும் கையில் ஒரு பாதுகையுமாகக்
காட்சியளித்ததாகவும் கூறுவார்கள். அதன் காரணத்தைக் கேட்ட
மன்னனைத் திரும்பிச் செல்லுமாறு அனுப்பியதாகவும் சொல்வார்கள்.
ஒன்பதாண்டுகள் அவர் ஒரு குகையில் தியானம் செய்தாராம்.
அப்போது குகையின் சுவற்றை நோக்கியவண்ணம் அமர்ந்திருந்தாராம்.
அவ்வாறு சுவற்றில் அழுந்தியவாறு அமர்ந்திருந்ததால் அவருடைய
உருவம் அந்தக் குகையின் சுவற்றில் பதிந்துவிட்டதாம்.
அவ்வாறு அவர் தியானம் செய்யும்போதுதான் குங்க் ·பூ
போரில் உள்ள புலி, நாரை, சிறுத்தை, பாம்பு, யாளி ஆகிய
உத்திகளைக் கண்டறிந்தார் என்று சொல்வார்கள்.
அன்புடன்
ஜெயபாரதி
>
>
> போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை
>எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே
>பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு
>பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
> ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின்
>சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
> அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின்
>செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம்
>உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச்
>செயல்படுத்த முடியும்.
> உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார்.
>
> அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச்
>செய்யச் சொல்லிக்கொடுத்தார். தங்களது கோயில்களைச்
>சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே
>விளைவித்துக்கொண்டார்கள்.
> சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.
> உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில
>தற்காப்பு முறைகளயும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து
>பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில்காயம் ஏற்படா
>முறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
> பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின்
>பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு
>சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது
>போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.
>
> அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை
>ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>
>> அவர் காஞ்சிபுரத்துக்காரர் என்று சொல்வார்கள். காஞ்சியில்
>>இருந்த பல்கலைக்கழகத்தில் அவர் படித்திருக்கிறார்.
>>
>>
>> போதி தர்மரிடம் திரும்புவோம். அவர் காஞ்சிபுரத்தின் பிராமணக்
>>குடும்பம் ஒன்றில் பிறந்து பௌத்தராகிக் காஞ்சியின் பௌத்த சங்கத்தில்
>>இருந்துவிட்டு அங்கிருந்து வடக்கே நலாந்தாவுக்குச்சென்று, அங்கிருந்து
>>சீனாவுக்குச் சென்றார் என்று சொல்வார்கள்.
>> மதுரையைச் சுற்றி பௌத்தக் குடியினர்நிறைய வசித்த சில
>>ஊர்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று தற்சமயம் 'கருங்காலக்குடி'
>>என்ற பெயரில் இருக்கிறது. ஈராயிரம்ஆண்டுகளுக்கு முன்னர் அது
>>'எருக்காட்டூர்'. மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து
>>முப்பது கீலோமீட்டரில் தொலைவில் இருக்கும். அந்த ஊரில் ஐம்பது
>>ஆண்டுகளுக்குமுன்புவரை பௌத்தத்தின் சுவடுகள் இருந்திருக்கின்றன.
>>இப்போதும்கூட கருங்காலக்குடியின் மிக அருகில் 'பூத மங்கலம்'
>>என்றொரு சிற்றூர் இருக்கிறது. பூதமங்கலம் வேறொன்றுமில்லை.
>>'புத்தமங்கலம்'தான். அதுபோலவே 'சீனமங்கல'மும் இருந்திருக்கிறது.
>>ஜினமங்கலம்@சினமங்கலம். சமணர்களின் ஊர்.
>> போதி தர்மர் அந்த ஊரில் பிறந்தவர் என்ற செவி வழிச்செய்தி
>>அங்கு வழங்கியது. அந்த வட்டாரத்தில் முத்துக்கோனார் என்னும்
>>ஓய்வுபெற்ற கல்வியதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கப்பலூர் கரியமாணிக்கன்
>>கோவையைப் பற்றி அரிய ஆராய்ச்சிகள் செய்தவர். சங்க காலத்தின்
>>காலத்தைப் பற்றியும் ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருந்தார்.
>போதிதர்மர் கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் என்று முத்துக்கோனார்
>சொல்வார்.
>>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
>>
==========================>
X-Apparently-To: jaybee555@yahoo.com via 206.190.38.201; Wed, 31 May 2006 07:57:14 -0700
X-Originating-IP: [209.73.160.89]
Authentication-Results: mta342.mail.mud.yahoo.com
from=yahoogroups.com; domainkeys=pass (ok)
Comment: DomainKeys? See http://antispam.yahoo.com/domainkeys
DomainKey-Signature: a=rsa-sha1; q=dns; c=nofws; s=lima; d=yahoogroups.com;
b=hSebwFGs707yaA+ChtRU441669SmjfDn24ygEGMkCuLg20XL/ZEo9g2wvV7/Ubwoz45zq+J7pGLtWaFg4qK+iijkwNCxFF5UJrYjG36XlxkhXlfp2h695WzVuArJSz4x;
X-Yahoo-Newman-Id: 1024082-m35642
X-Sender: jaybee555@yahoo.com
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Comment: DomainKeys? See http://antispam.yahoo.com/domainkeys
To: agathiyar@yahoogroups.com
User-Agent: eGroups-EW/0.82
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Originating-IP: 209.73.160.85
X-Yahoo-Post-IP: 218.111.0.221
From: "jaybee555" <jaybee555@yahoo.com>
X-Yahoo-Profile: jaybee555
Sender: agathiyar@yahoogroups.com
Mailing-List: list agathiyar@yahoogroups.com; contact agathiyar-owner@yahoogroups.com
Delivered-To: mailing list agathiyar@yahoogroups.com
List-Id: <agathiyar.yahoogroups.com>
List-Unsubscribe: <mailto:agathiyar-unsubscribe@yahoogroups.com>
Date: Wed, 31 May 2006 14:54:33 -0000
Subject: [agathiyar] Siddhars -#?15
Reply-To: agathiyar@yahoogroups.com
இப்போது இன்னொரு சமயத்தைச்சேர்ந்த சித்தரைப் பற்றிச்
சொல்கிறேன்.
இவரும் பௌத்தர்தான். சில மடல்களுக்கு முன்னர் திபெத்திய
பௌத்த சன்னியாசிகள்/சித்தர்கள் பற்றிச் சொன்னேன்.
ஆனால் இவர் ஸென் பௌத்ததைச் சேர்ந்த சித்தர்.
பெயர் போதிதர்மா.
சீனாவில் அவர் குடியேறி அங்கு சிறப்பாக இருந்து ஸென்
பௌத்தத்தைத் தோற்றுவித்தார். அத்துடன் குங்·பூ மார்ஷியல் போரியலையும்
கண்டுபிடித்தார். ஷாஓலின் மடங்கள் கொயில்களையும் ஏற்படுத்தினார்.
அவர் மேற்கிலிருந்து வந்தார் என்று சீனர்கள் சொல்வார்கள்.
தமிழகம் சீனாவுக்கு மேற்கேதானே இருக்கிறது. அப்படியானால்
அவர் அவர்களுக்கு மேல்நாட்டார்தானே.
தமிழகத்தைவிட்டு அவர் கீழைநாட்டுக்குச் சென்றார்.
"ஏன்? ", என்பது கேள்வி.
போதி தர்மரைச் சீனர்கள் 'போ ட்டி தா மா' என்று அழைக்கிறார்கள்.
சீனர்களிடம் அவருடைய ஓவியங்களிக் காணலாம். கரிய அடர்த்தியான
புருவம், பெரிய பருத்த மூக்கு, தாடி மீசை, குண்டு விழிகள் ஆகியவற்றுடன்
அவரை வரைந்திருப்பார்கள்.
அவர் காஞ்சிபுரத்துக்காரர் என்று சொல்வார்கள். காஞ்சியில்
இருந்த பல்கலைக்கழகத்தில் அவர் படித்திருக்கிறார். 'கல்வியில்
கரையிலா காஞ்சி' என்று அப்பர் பெருமான் வர்ணித்திருக்கிறார்.
அவர் காஞ்சிபுரத்தின் முக்கியக் குடும்பம் ஒன்றில் பிறந்து
பௌத்தராகிக் காஞ்சியின் பௌத்த சங்கத்தில் இருந்துவிட்டு அங்கிருந்து
வடக்கே நலாந்தாவுக்குச்சென்று, அங்கிருந்து சீனாவுக்குச் சென்றார்
என்று சொல்வார்கள்.
மதுரையைச் சுற்றி பௌத்தக் குடியினர் நிறைய வசித்த சில
ஊர்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று தற்சமயம் 'கருங்காலக்குடி'
என்ற பெயரில் இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது
'எருக்காட்டூர்'. மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து
முப்பது கீலோமீட்டரில் தொலைவில் இருக்கும். அந்த ஊரில் ஐம்பது
ஆண்டுகளுக்குமுன்புவரை பௌத்தத்தின் சுவடுகள் இருந்திருக்கின்றன.
இப்போதும்கூட கருங்காலக்குடியின் மிக அருகில் 'பூத மங்கலம்'
என்றொரு சிற்றூர் இருக்கிறது. பூதமங்கலம் வேறொன்றுமில்லை.
'புத்தமங்கலம்'தான். அதுபோலவே 'சீனமங்கல'மும் இருந்திருக்கிறது.
ஜினமங்கலம்@சினமங்கலம். சமணர்களின்ஊர்.
போதி தர்மர் அந்த ஊரில் பிறந்தவர் என்ற செவி வழிச்செய்தி
அங்கு வழங்கியது.
அந்த வட்டாரத்தில் முத்துக்கோனார் என்னும்
ஓய்வுபெற்ற கல்வியதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கப்பலூர் கரியமாணிக்கன்
கோவையைப் பற்றி அரிய ஆராய்ச்சிகள் செய்தவர். சங்க காலத்தின்
காலத்தைப் பற்றியும் ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருந்தார். போதிதர்மர்
கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் என்று முத்துக்கோனார் சொல்வார்.
போதி தர்மரைப் பற்றி வேறு சில வரலாறுகளும் இருக்கின்றன.
அவர் சீனாவில் தொடர்ச்சியாக ஒன்பதாண்டுகள் தியானத்தில்
இருந்தாராம். ஒரு சுவற்றை நோக்கி அமர்ந்துகொண்டு அதனையே
பார்த்தவண்ணம் இருந்தாராம். ஆரம்பத்தில் தூக்கம் வந்ததாம். ஆகவே
தம்முடைய கண்களின் மேல் இரப்பைகளைப் பிய்த்து எடுத்து தூக்கி
எறிந்துவிட்டாராம். அந்த வண்ணம் அவர் கண்களை மூடாமல் தூங்காமல்
இருந்தாராம்.
அந்த இரப்பைகள் விழுந்த இடத்தில் ஒரு செடி முளைத்ததாம்.
அந்தச் செடியின் இலைகள் காய்ந்து உலர்ந்து சருகுகளாக அங்கே
கிடந்தனவாம்.
ஒரு புத்த பிக்கு ஒருமுறை திறந்த வெளியில் அந்தச் செடி இருந்த
இடத்திற்கு அருகில் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தாராம்.
அவர் எப்போதுமே வெந்நீர்தான் குடிப்பவர். அந்த வெந்நீர்ப் பாத்திரத்துக்குள்
அந்தச் செடியின் சருகுகள் காற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு
விழுந்துவிட்டனவாம். நீரை வீணாக்க விரும்பாத புத்த பிக்கு, அந்தச்
சருகுகளை எடுத்தெறிந்துவிட்டு, அந்த வெந்நீரைப் பருகினாராம்.
அதனைப் பருகியதும் உடல் சுறுசுறுப்பாகவும் மனது தெளிவாகவும்
இருந்ததாம். அதுவரைக்கும் அழுத்திக்கொண்டிருந்த சோம்பல் தூக்கம்
ஆகியவை சென்ற இடம் தெரியாமல் ஓடி மறைந்துவிட்டனவாம்.
அந்தச்செடியை ஆராய்ந்து பர்த்துவிட்டு, அதன் இலைகளைப்
பானமாக்கி குடிக்கும் வழக்கத்தைத் தாமும் மேற்கொண்டுவிட்டு
சீனாவிலும் அந்த பிக்கு பரப்பிவிட்டாராம்.
அப்படித் தோன்றியதுதான் தேயிலையாம்.
போதிதர்மரின் கண்ணிமைகள்.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை
எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே
பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு
பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின்
சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின்
செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம்
உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச்
செயல்படுத்த முடியும்.
உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார்.
அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும்
சொல்லிக்கொடுத்தார்.
அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச்
செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும்
தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள்.
சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.
உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில
தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து
பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா
முறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின்
பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு
சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது
போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.
அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை
ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.
இந்த இலக்கில் போதி தர்மரின் சீன மரபு ஓவியத்தைக்
காணலாம் -
http://www.geocities.com/arthur_avalon/bodhidharma.jpg
அன்புடன்
ஜெயபாரதி
==================
No comments:
Post a Comment