Sunday, January 12, 2014

BLUE GEMS IN KADARAM


நீலமணியின் நீண்ட கதை

கடாரம்



கொங்குநாட்டு நீலமணிகள்


அரிக்கமேடு




நீலமணி கண்ட கோவா பெண்மணி

இப்போதெல்லாம் சில ஆண்டுகளாகக் கடாரச் சின்னங்கள் மியூசீயத்துக்குச்செல்பவர்கள் கூட்டம் அதிகமாகிவருகிறது. 
வருகிறவர்களில் பலர் இரண்டு மூன்று பஸ்களில் வருகிறார்கள். அதுவோ சிறிய இடம். ஒரே சமயத்தில் எண்பது பேர் உள்ளே நுழைந்து பார்த்து என்னத்தை அறிந்துகொள்ளப்போகிறார்கள்? 
முதலில் விஷய ஞானம் உள்ளவர்கள் உடன் இருத்தல் மிகவும் அவசியம். அவர்கள் மியூஸீயத்தில் இருக்கும் அரும்பொருட்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லி விளக்கங்கள் கொடுக்கவேண்டும். 
அந்த மியூஸீயத்தில் இந்து சமயம், பௌத்த சமயம் ஆகியவை சம்பந்தப்பட்ட சின்னங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் பின்னணிகள் இருக்கும். 
         ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மணிக்கற்களை அந்த வட்டாரத்தில் எடுத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைச் சிறிய பாலிதீன் பைகளில் போட்டு வைத்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் போகிற போக்கில் சற்று எட்டத்தில் இருந்து நகர்ந்தவாக்கில் பார்ப்பார்கள்; அல்லது பார்க்காமல் சென்றுவிடுவார்கள். 
அந்தக் கற்களில் பல மாதிரி உண்டு. அவற்றில் குறிப்பாகச் சொல்லப் 
போனால் சில நீலமணிக் கற்கள் இருக்கின்றன. அவற்றை Corundum 
கொருண்டம் என்று இங்கிலீஷில் குறிப்பிடுவார்கள். 
அந்தக் கற்களைத் தமிழில் குருந்தக் கல் என்று குறிப்பிடுகிறோம். 
அந்த வகைக் கற்கள் கொங்குநாட்டுப் பகுதியில் ஒரு மலையில் கிடைக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே யவனர்கள் அந்தக் குருந்தக் கற்களை மிகுதியாக வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
12-03-2000த்தில் கடாரம் சம்பந்தமாக டாக்குமெண்டரி எடுப்பதற்காக 
கோவாக்காரப் பெண்மணி ஒருவரின் தலைமையில் ஒரு குழு வந்திருந்தது. 
சிங்கப்பூர் அரசுக்காக அந்த டாக்குமெண்டரி எடுக்கப்பட்டது. 
என்னைச் சந்திக்குமாறு சிங்கப்பூரில் யாரோ சொல்லி அனுப்பியிருந்தார்கள். 
பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
மியூஸீயத்தில் அந்த கோவாப் பெண் நீலமணிக் கற்களையே பார்த்தவாறு நின்றிருந்தார். 
நான் அந்தக் கற்களைப் பற்றி சொல்லி கொங்குநாட்டு நீலமலையைப் பற்றியும் சொல்லிக்கொண்டு வந்தேன். அங்கு மட்டும்தான் அந்தக் கற்கள் விளைந்தன.
அந்தப் பெண் கவனமாகக்கேட்டுவிட்டு, "நான் இதே கற்களை 
அரிக்கமேட்டில் பார்த்திருக்கிறேன்", என்றார். அங்கும் டாக்குமெண்டரி 
எடுத்திருக்கிறார்கள்.
அரிக்கமேடு என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த பெரிய பட்டினம். அங்கு யவனர் குடியிருப்பு, வர்த்தகமையம் ஆகியவை இருந்தன. யவனர்கள் அரிக்கமேட்டை 'பொதுக்கே' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 
கடாரத்துக்கும் அந்த நீலமணிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
அவைதாம் மற்ற சிறு சிறு மணிக் கற்களுடன் அந்தப் பாலிதீன் பைகளில் கலந்து இருந்தன. 
பாருங்கள்......
ஒரே ஒரு அயிட்டம். சின்னஞ்சிறு கற்கள். ஒதுக்குப் புறமாய்க் கலந்து கிடந்தன.
ஆனால் அவற்றில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. 
அதனால்தான் சொன்னேன்......
விஷயம் தெரிந்தவர்களை அங்குக் கூட்டிச்சென்று விளக்கம் பெறவேண்டும். 
இல்லையென்றால் நேரத்துக்கும் பெட்ரோலுக்கும் பிடித்த கேடு என்று ஆகிறது. 

Tuesday, December 10, 2013

rajaraja


ராஜராஜ சோழரின் மின்னல் போர்முறை


இராஜராஜ சோழர்




 தஞ்சை பெரிய கோயில்


காந்தளூர்ச்சாலைப் போர்

Tuesday, November 12, 2013

NOSTRADAMUS PREDICTIONS


PREDICTIONS OF NOSTRADMUS

EMPEROR NAPOLEON OF FRANCE



NAPOLEON'S RETREAT FROM RUSSIA



GUILLOTINE 


ADOLF HITLER



SWASTIKA - CROOKED CROSS

LONDON UNDERGROUND


LUFTWAFFE


NUCLEAR EXPLOSION





STATUE OF LIBERTY

Tuesday, October 15, 2013

NOSTRADAMUS


FOR MR.ANBUCHELVAN

NOSTRADAMUS 

PICTURES


NOSTRADAMUS


  CADUCEUS



IMHOTEB 



NOSTRADAMUS WANDERER




NOSTRADAMUS RESEARCH



BOOK




GALILEO INQUISITION

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, July 8, 2013

காசு, பணம் துட்டு....



காசு 
முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியர் காசு 
இதை ஆனை அச்சு என்றும் அழைத்தார்கள்
கிபி 1251 - 1293



பணம்

ஆங்கிலேயர் ஆட்சியில் புழங்கிய ஒரு பணம் என்னும் அரைக்கால் ரூபாய்


துட்டு

ஆங்கிலேயர் ஆட்சியில் புழங்கிய முக்கால் துட்டு, அரைத் துட்டு, 
கால் துட்டு நாணயங்கள்.
முக்கால் துட்டு என்பது காலணா
கால் துட்டு என்பது தம்பிடி அல்லது சல்லி

கீழே இவற்றிற்கான விளக்கம் கொண்ட அகத்தியர் குழு மடல்!

"காசு, பணம், துட்டு, Money, Money......"
இவற்றில் காசு, பணம், துட்டு ஆகியவை இப்போது பணம் என்ற பொருளைப் பொதுவாகக் குறிக்கும் சொல்லாக இருக்கின்றன. 
ஆனால் இவை மூன்றுமே வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் நாட்டில் 
வழங்கிய, குறிப்பிட்ட மதிப்புக்கொண்ட currency நாணயங்களாக இருந்தவை. 
இவற்றில் 'காசு' என்பது மிகவும் பழைமையானது. ஒரு கால கட்டத்தில் இது பொன்னால் ஆகிய நாணயமாக விளங்கியது. 
பாண்டியர்கள் காலத்தில் ஒரு பொற்காசுவுக்கு 12000 வெற்றிலைகள் 
வாங்கலாம்.
பிற்காலத்தில் காசு என்பது ஒரு செப்பு நாணயமாக விளங்கியது. அப்போது அதன் மதிப்பும் குறைந்துவிட்டது. 
"காக்காசுப் பெறாத விஷயம்" என்ற சொல்வழக்குக்கு இடம் கொடுத்தது. 
கால்க்காசு என்பது மிகச் சிறிய நாணயமாக விளங்கியது.
'பணம்' என்பது பழங்காலத்தில் ஒரு பொன் நாணயமாக இருந்தது. 
பிற்காலத்தில் வெள்ளி நாணயமாக விளங்கியது. 
இது ஒரு வெள்ளி ரூபாயில் எட்டில் ஒரு பங்காக இருந்தது. 
'அணா' நாணயக் கணக்கு புழக்கத்துக்கு வந்தபோது ஒரு சிறிய வெள்ளிக்காசாக விளங்கியது. அது இரண்டு அணா மதிப்புப் பெற்றதாக இருந்தது. அரைக்கால் ரூபாய் என்றும் சொல்வார்கள்.
சிறிய வெள்ளி நாணயம். 
இதற்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. 
சம்பந்தப்புரம், மாமன் மச்சான் முறை கொண்டவர்களைத் திருமணத்துக்கு அழைக்கும்போது ஒரு தாம்பாளத்தில் வெள்ளிப் பணத்துடன் வெற்றிலை பாக்கு வைத்து பத்திரிக்கை வைத்து மரியாதையாக அழைப்புக்கொடுப்பார்கள்.
இதைப் 'பணம் பாக்கு வைத்தல்' என்பார்கள்.
இதை வாங்கியவர்கள் கட்டாயமாக திருமணத்துக்குச் சென்று ஒரு மஞ்சள் துணியில் அதே வெள்ளிப் பணத்தை வைத்து முடிச்சுப்போட்டு அதை மாப்பிள்ளை அல்லது பெண்ணின் மணிக்கட்டில் கட்டி விடுவார்கள். 
இதைக் 'கங்காணம் கட்டுதல்' என்பார்கள்.
இதிலெல்லாம் அந்தக் காலத்தில் ஏதாவது சச்சரவு வந்தது உண்டு.
'துட்டு' என்பது முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் புழங்க ஆரம்பித்து ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் ஆட்சியின் ஆரம்பகாலம் வரைக்கும் இருந்தது.
அப்போது ரூபாய், அணா, பைசா என்னும் கரென்ஸி இந்தியாவின் அதிகாரபூர்வமான கரென்ஸியாக விளங்கியது. 
அந்த வரிசையில் 'துட்டு' என்பதும் கொஞ்ச காலம் இருந்தது. 
ஓர் அணாவில் மூன்றில் ஒரு பங்கு. அந்த நாணய வரிசையில் மிகச் சிறிய மதிப்புக் கொண்டதாக ஒரு சல்லி, அல்லது தம்பிடி விளங்கியது. பன்னிரண்டு தம்பிடி கொண்டது ஓர் அணா. 192 சல்லி/தம்பிடி கொண்டது ஒரு ரூபாய். ஒரு துட்டுக்கு நான்கு சல்லி. 
காலணாவுக்கு மூன்று சல்லி. காலணா என்பது முக்கால் துட்டுக்குச் சமம். 
ஆகவே காலணாவை 'முக்காத் துட்டு' என்றே பெரும்பாலும் குறிப்பிட்டார்கள்.
"காத்துட்டுக்குப் பிரயோசனமில்லை", "தம்பிடிக்கு ஆகாத வேலை", 
"சல்லித்தனம்", "சல்லிப்பயல்" என்ற சொல்வழக்குகள் எல்லாம் 
இருந்திருக்கின்றன.


                                   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$