Wednesday, September 21, 2011

FROM AGATHIYAR-#1 - PATHS LESS WALKED ALONG



அன்பர்களே,


அமேரிக்காவில் உள்ள பிரபல இதழ் ஒன்றுக்காக வேண்டுகோளின்பேரில் எழுதப்பட்டது.
பிரசுரமாகியதா என்பது தெரியாது.
இதை இன்னும் விரிவாக எழுதவேண்டியுள்ளது.......
பாகங்களாகப் பிரித்து எழுதுகிறேன்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>
"நவீன அறிவியல் மூலம் மெய்ப்பிக்க இயலாத, மறுக்கவும் இயலாத உண்மைகளைப் பற்றிப் பேசும் சிறப்புப் பகுதி ஒன்றினை வெளியிட உள்ளோம். இந்தப் பின்னணியில் நீங்கள் உங்களுக்கு
விருப்பமான ஏதேனும் ஒரு பொருள் குறித்து நீங்கள் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கேட்டவர் கேட்டிருந்தார்.


அவர் கேட்டிருக்கும் விஷயங்களில் நீண்ட காலப்பரிச்சயம் எனக்கு உண்டு.
தமிழர்களே சென்றிராத சில இடங்களில் நான் வேலை பார்த்திருக்கிறேன். அந்த இடங்கள் இருக்கும் மாநிலங்கள் மலாயாவின் கிழக்குப் பக்கத்தில் தென் சீனக்கடலின்கரையில் இருக்கின்றன. ஆனால் கரையோரத்தில் யார் வேலை தந்தது? எல்லாம் காட்டுக்கு நடுவில் உள்ள இடங்கள்.
தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அத்தகைய இடங்களில் வேலை செய்யும்போது பல அபூர்வ
விஷயங்களைப் பார்க்கவும் நேரடியாக அனுபவிக்கவும் நேர்ந்தது.
அவற்றின் தன்மைகளை விளக்குவதோ அல்லது அவை ஏன் அவ்வாறு நடக்கின்றன/ இயங்குகின்றன என்பதை நிரூபிப்பதோ தற்கால சிந்தனையின் பின்னணியில் இயலாத காரியம்.
இப்போது நாம் கைக்கொள்ளும் Straight Thinking, Logical Thinking சிந்தனாமுறைகளின் அடிப்படையில் அவற்றை விளக்கவேமுடியாது.
அந்த சிந்தனாமுறையின் அடிப்படையில் அவை இல்லை என்றும் ஒதுக்கித்தள்ளிவிடமுடியாது.
ஏனெனில் நாம் அவற்றைப் பார்க்கமுடிகிறது; அனுபவிக்கமுடிகிறது.
Cause and Effect என்பனவற்றுக்கு இடையே நிலையான சாஸ்வதமான தொடர்புகளை நாம்
பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டு வந்துவிட்டோம்.
அந்த மாதிரியான தொடர்பை நம்மால் ஏற்படுத்த முடியவில்லையென்றால் கையை விரித்து
விடுகிறோம்; அல்லது அப்படியே ஒதுக்கித்தள்ளி ஓரங்கட்டிவிடுகிறோம்; அல்லது அப்படியெல்லாம் இல்லை அல்லது அப்படியெல்லாம் இருக்காது அல்லது அப்படியெல்லாம் இருக்கமுடியாது என்று மறுத்துவிடுகிறோம்.
நியூ யார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ஒரு பொருளாதார நிபுணர். அவரைச் சுற்றி நடப்பனவற்றைப் பார்த்துவிட்டு, அவர் தமக்கு ஓராண்டுகாலம் விடுப்பு கொடுத்துக்கொண்டு உலகத்தையே வலம் வந்தார்.
அவருடையது ஒரு தேடல். Sylva Mind Control லிலிருந்து டீயெம் தியானம், ஆப்·ரிக்க மாந்திரீகம் என்று தொட்டுக்கொண்டே அவர் பல நூற்றுக்கணக்கான அபூர்வ விஷயங்களை ஆராய்ந்தார்.
தம்முடைய அனுபவங்கள் அறிந்தவை ஆகியவற்றின் அடிப்படையில், ஓர் அற்புதமான புத்தகத்தை எழுதினார். 'Powers of The Mind' என்னும் அந்த நூல் இப்போது கிடைப்பதில்லை. அவருடைய புனைப்பெயரான Adam Smith என்னும் பெயரில் எழுதியுள்ளார். 'Wealth of Nations'
எழுதிய அவரல்ல இவர்.


அன்புடன்


ஜெயபாரதி


அன்பர்களே,


தியானத்தைப் பற்றிய அவநம்பிக்கையுடன் ஆய்வுகளைத் தொடங்கியவர், ஹார்வர்டு
பல்கலைக் கழகத்தின் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் ஹெர்பெர்ட் பென்ஸன். Relaxation Response என்ற முதல் நூலைத் தொடர்ந்து அவர் செய்த பல ஆய்வுகளின் மூலம்
திபேத்திய யோகியரின் அமானுஷ்யமான சித்திகளைப் பற்றி வியப்போடு அவர் அறிந்துகொண்டவை அவரை Beyond Relaxation Response என்னும் கடைசி நூலை வெளியிடுவதில் கொண்டுவந்துவிட்டது.
ஆ·ப்ரிக்க மாந்திரீகர்கள், கரீபியன் தீவுகளின் மாந்திரீகர்கள் ஒரு மந்திரக்கோலை அல்லது எலும்பை ஒருவனை நோக்கி நீட்டி இறந்துபோகுமாறு சபித்தால் அந்த மனிதன் இறந்துபோய்விடுவதை ஆராய்ந்தார். அந்த மாதிரி இறத்தலை VooDoo Death என்று சொல்வார்கள்.
எப்படி அந்த சபித்தலால் ஏற்படுத்தப்பட்ட அதிர்ச்சி, வேகஸ் நரம்பின் மூலமாக இதயத்தை
நிறுத்திவிடுகிறது என்பதை ஓரளவுக்கு நிறுவினார். அதனையும் அதைப் போன்ற வேறு சில
விஷயங்களையும் அவர் 'Mind Body Effect' என்ற நூலாக வடித்திருக்கிறார்.


தமிழ் மருத்துவ நூல்கள் பாடல்களின் வடிவில் விளங்கும்.
மருத்துவத்தில் மூலிகை மருத்துவம் என்பது ஓர் உட்பிரிவு.
சில மூலிகைகளைப் பிடுங்குவதற்குச் சில வழிமுறைகளை அனுஷ்டிக்கவேண்டியிருக்கும்.
ஒரு குறிப்பிட்ட திதியன்று, குறித்த நேரத்தில் இன்னின்ன மாதிரியான இடத்தில் வளரும்
குறிப்பிட்ட மூலிகையின் குறிப்பிட்ட திக்கை நோக்கி ஓடும் வேருக்குப் பூஜை போட்டு, காப்புக்கட்டி, சாப விமோசனம் செய்து, கற்பூர தீபம் காட்டிய பின்னர் அதனை எடுக்குமாறு அந்தப் பாடல்
சொல்லும்.
இந்த மாதிரியான சமாச்சாரம் நம்மிடையே மட்டும்தான் இருக்கின்றன என்று எண்ணி
விடவேண்டாம்.
நைஜீரியாவின் மருத்துவ மாந்திரீகர்களிடமும்-Shamans- இதே மாதிரியான வழக்கம்
இருக்கிறது.
ஸ்விட்ஸர்லந்தின் ஆய்வாளர்கள் சிலர் இதைப் பற்றி ஆராய்ந்தனர்.
குறிப்பிட்ட திதியில் நேரத்தில் பிடுங்கப்படும் வேரில் மற்ற சமயங்களில் அந்த வேரில்
காணப்படாத ரசாயனங்கள் இருப்பதை கண்டுபிடித்தார்கள்.
இந்த விஷயம் எப்படி நைஜீரிய மாந்திரீகர்களுக்குத் தெரிந்திருக்கிறது? நம்முடைய மருத்துவப் பாடலும் சொல்கிறது. இந்த அறிவும் ஞானமும் எங்கிருந்து வந்தன; எப்படிப் பரவின? நைஜீரியன்
மாந்திரீகருக்கும் நம்முடைய சித்தருக்கும் என்ன சம்பந்தம்?


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் கோத்தாபாரு என்னும் ஊரில் இருக்கும்போது தய்ச்சீ Tai Chi நிபுணர் ஒருவர் அங்கு வந்திருந்தார். தய்ச்சீயைப் பற்றி சில சாதனைகளை அவர்
காட்டினார்.
ஒருவர் பின்னால் ஒருவராக ஏழு பேர் நின்றுகொண்டனர். தமக்கு முன்னால் நிற்பவரின்
முதுகின்மீது இரண்டு உள்ளங்கைகளையும் வைத்துக்கொண்டு நின்றனர். அந்த எழுவரில் முதலாவது ஆள் தய்ச்சீ மாஸ்டரின் உள்ளங்கைகளின்மீது தம்முடைய கையைகளை வைத்து அழுத்திக்
கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட சமிக்ஞையின்பேரில் வரிசையின் உள்ளவர்கள் தமக்கு முன்னால் உள்ள ஆளின் முது¨கின்மீது கைகளை அழுத்தித் தள்ளினார்கள். முதல் ஆள் தாய்ச்சீ மாஸ்டரின் உள்ளங்கையை அழுத்தித் தள்ளிக்கொண்டிருந்தார். சில வினாடிகள்தாம். தய்ச்சீ மாஸ்டர் ஒரு
சிலிர்ப்பு சிலிர்த்தார். அவ்வளவுதான் அந்த எழுவரும் உதறித் தள்ளியதுபோல் எகிறி விழுந்தார்கள்.
அதனை அடுத்து, மீண்டும் அதே மாதிரி நின்றுகொண்டு அழுத்தினர்.
அப்போதும் தய்ச்சீ மாஸ்டர் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தார்.
இம்முறை எழுவரும் விழவில்லை.
அந்த க்யூ வரிசையின் கடைசி ஆள் இருந்தானே, அவன்மட்டும் சில அடிகள் தள்ளிப்போய்
பிடித்துத் தள்ளினாற்போல விழுந்தான்.
என் நண்பர் ஓமார் டானிடம் கேட்டேன். அவர் தய்ச்சீ, தாவொ சித்தாந்தம் முதலியவற்றில்
நிபுணர். அவர் சொன்னார், "Its all Chi Energy-lah Boss. You people call it Kundalini", என்றான்.
குண்டலினிக்கு அப்படியும் ஒரு உபயோகம் இருக்கிறது என்பதை அப்போதுதான் முதல் தடவையாகத் தெரிந்துகொண்டேன்.


அன்புடன்


ஜெயபாரதி


அன்பர்களே,


தமிழகத்தின் பிரான்மலைக்கு அருகில் பாறைகளை வெட்டிக் கல்லெடுப்பார்கள்.
அப்போதெல்லாம் சில குறிப்பிட்ட மாதங்களில் பாறையை வெட்டமாட்டார்கள். வெட்டுவது
மிகவும் கடினம் என்பார்கள். வேறு சில மாதங்களில் பாறையை வெட்டுவார்கள். அப்போதுதான்
சுலபமாக வெட்டமுடியுமாம். மலை 'தூங்குகிறது' என்பார்கள். மலை தூங்குமா? அல்லது ஏதோ Geodesic Force, GeoMagnetic Field Fluctuations போன்றவற்றால் ஏற்பட்ட விளைவா?


இதுபோன்ற நூற்றுக்கணக்கான விஷயங்கள் என்னை இந்த துறையிலும் உற்று நோக்க வைத்தன.
அதன் விளைவாக ஏற்பட்டதுதான் 'அப்பாலுக்கப்பால்' என்னும் தலைப்பில் நான் எழுத ஆரம்பித்த நூல். அதுவும் ஒரு தேடல்தான்.


ஏற்கனவே நான் இந்த மாதிரியான தேடல்களைப் பள்ளியில் படிக்கும்போதே - பதினைந்து
வயதிலிருந்து செய்ய ஆரம்பித்தவன்.
அது சம்பந்தமான புத்தகங்களை வாங்கிப் படிக்கலானேன்.
வரலாறு, இந்திய/தென்னிந்திய வரலாறு என்று எடுத்துக்கொண்டால், அதற்கு நான் எடுத்துக்
கொண்ட முக்கிய நடவடிக்கைகளைச் சொல்கிறேன்.
பினாங்கு மாநகரத்தில் என்னுடைய பள்ளிப்படிப்பு. அங்கெல்லாம் காலையில் 7-40 இலிருந்து மதியம் 2-00 வரைக்கும் பள்ளி நேரம்.
மீதி நேரத்தில் இரவு 10-00 மணி வரைக்கும் ஹோம் வர்க், ரிவிஷன் போன்றவற்றுடன் மற்றவகையான படிப்புகளைச் செய்யலாம்.
வீட்டில் கட்டுப்பாடு ரொம்பவும் இருந்ததால் வெளியில் அதிகம் செல்லமுடியாது. மாலையில் அருகில் இருக்கும் எஸ்ப்லனேட் பீச்சுக்குப் போகலாம்.
எங்கள் தெருவிலிருந்த பினாங்கு ஸ்டோர் போன்ற வெளிநாட்டு ஆங்கிலப் புத்தகக் கடைகளுக்கும் பக்கத்துத் தெருவில் இருந்த சிவகுரு என்னும் தமிழ்ப் புத்தகக்கடைக்கும்
செல்லலாம்.
சிவகுருவில் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, கலைக்கதிர், கல்கண்டு ஆகியவற்றிற்குச் சந்தா கட்டியிருந்தோம்.
ஆனால் எப்போது வேண்டுமானாலும் அங்குச் சென்று 'மன்றம்', 'தென்றல்' போன்ற மற்ற
பத்திரிக்கைகளை நின்றுகொண்டே படிக்கலாம்.
பினாங்கு ஸ்டோரில் பீனோ, டேண்டி, ரேடியோ ·பன், ·பில்ம் ·பன், ஈகில், மற்றும் கிட்
கார்ஸன், பக் ஜோன்ஸ் காமிக்ஸ¤ம் வாடிக்கையாக வாங்கியதால் அங்கும் நின்றுகொண்டே மற்ற புத்தகங்களைப் படிக்கலாம்.
யூஎஸ்ஐஎஸ் லைரரியிலிருந்து ஏராளமான நேச்சரல் ஹிஸ்டரி புத்தகங்கள் வாங்குவது.
பினாங்கு லைப்ரரியில் அமர்ந்துகொண்டு பஞ்ச்ச்(Punch) படிப்பேன்.
Basham எழுதிய Wonder That Was India, நீலகண்ட சாஸ்திரியின் History Of South India
ஆகிய இரு புத்தகங்களையும் திரும்பத் திரும்ப ரீநியூ பண்ணி எடுத்து எடுத்து அவற்றை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்தேன்.
பதினேழு வயதிற்குள் ஆங்கில க்லாஸிக்ஸ் பலவற்றைப் படித்தாயிற்று.
பதினேழு பதினெட்டு வயதுகளில் P.G.Wodehouse நாவல்கள் அனைத்தையும் படித்தாயிற்று.
பாஷாம் புத்தகத்தின் சில பாராகிரா·ப்களும் சாஸ்திரியாரின் புத்தகத்தின் முக்கிய பகுதிகளும்
மனப்பாடம்.
பின்னால் அல்டஸ் ஹக்ஸ்லி போன்றவர்களுடைய புத்தகங்களை சீப் ஸேலில் வாங்கி
வைத்திருந்தேன்.
பினாங்கில் கலைதாசன், கலைமணி என்னும் நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். அவர்கள் என்னைவிட மூத்தவர்கள். ஆயினும் என்னை ஓர் இண்ட்டலெக்ச்சுவல் கம்ப்பேனியனாக அவர்கள்
நடத்தினார்கள்.
அவர்களிடம் நூற்றுக்கணக்கில் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தன.
எல்லாம் இலக்கியம், வரலாறு முதலியவை.
அங்குதான் பழந்தமிழ் வரலாறு - குறிப்பாக 'குமரிக் கண்டம்' எனக்கு அறிமுகமாகியது.
ந.சி.கந்தையா பிள்ளையின் நூல்களை மீண்டும் மீண்டும் படித்தேன்.
இவ்வளவையும் படிப்பதற்கு என்னுடைய தந்தையார் ஏதும் தடை விதிக்கவேயில்லை.
ஏனெனில் தடவைக்குத் தடவை வகுப்பின் முதல் மூன்று பையனாகவே வந்தது.
பதினோரு ஆண்டுகள் படிப்பை எட்டேகால் ஆண்டுகளில் July 1950 - Dec 1858 டபுல்
ப்ரோமோஷன்களால் முடித்தது. சுமாரான பள்ளியில் ஆரம்பித்து, சில மாதங்களிலேயே வெகு விரைவில் பினாங்கிலேயே ஹைக்லாஸ் பள்ளிக்குச் சென்றது.
அந்த வயதிலேயே பலராலும் ஜீனியஸ் Genius என்று புகழப்பட்டது.
சொல்வதற்கு ஒன்றுமில்லைவா.


அன்புடன்


ஜெயபாரதி

No comments:

Post a Comment