THE MAGNIFICENT MYSTERIOUS MUKKURUNI VINAAYAGAR OF SIVAPURI
Sunday, April 28, 2013
Friday, April 5, 2013
MY WEB-PRESENCE
இணையத்தில் ஜேய்பி
(UPDATED 06042013)
(UPDATED 06042013)
Dear Sir/Madame,
உங்களுக்கு முகமன் கூறுகிறேன்.
பழங்காலத்தில் 'திருக்கை வழக்கம்' என்று சொல்வார்கள்.
இணையத்தில் என்னுடைய புழக்கம் பற்றிய அறிமுகம் -
இந்த 2013-ஆம் ஆண்டு இணையத்தில் என்னுடைய பதினேழாம் ஆண்டு.
Agathiyar Yahoo Group என்பது நான் நடத்திக்கொண்டிருக்கும் மடற்குழு.
1998-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்தக் குழு தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகிய இரு மொழிகளில் வழங்குகிறது. இந்த மடற்குழுவில் ஆயிரத்தைந்நூறு பேர் அங்கத்துவம் பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழுவில் தமிழ், ஆங்கிலம் சமஸ்கிருத மொழிகள் - இலக்கியங்கள், இந்து சமய கோட்பாடுகள், இலக்கியங்கள், சாஸ்திரங்கள், கலாச்சாரம், கலைகள், அதிநுட்பக் கலைகள், சித்தரியல், வரலாறு, தொல்வரலாறு, வருங்காலவியல், போன்ற விஷயங்களைக் காணலாம்.
My discussion group -
http://groups.yahoo.com/group/agathiyar/
கடந்த பதினாறு ஆண்டுகளில் இதில் 52000க்கும் மேற்பட்ட மடல்கள் வெளிவந்துள்ளன.
அவற்றில் 40000 மடல்கள் யூக்கோட் எழுத்துருவுக்கு மாற்றப்பட்டு
கீழ்க்கண்ட ஆவணகளத்தில் போடப்பட்டுள்ளன.
Archives -
http://www.TreasureHouseOfAgathiyar.net
இதுவரைக்கும் அகத்தியருடன் மற்ற மடற்குழுக்கள், இணைய அரங்குகள் போன்றவற்றில் 24000 மடல்கள், கருத்துரைகள், கட்டுரைகள்,
தொடர் கட்டுரைகள், வரலாறுகள், துணுக்குகள் ஆகியவற்றை எழுதி
யிருக்கிறேன்.
என்னுடைய முக்கிய வலைத்தளம் விஸ்வாக்காம்ப்லெக்ஸ் எனப்படுவது. அதில் முந்நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய கட்டுரைகளைப் படங்களுடன் போட்டிருக்கிறேன்.
http://www.visvacomplex.com
முருகனுக்கென்று ஒரு வலைத்தளம் ஸ்கந்தாவெப் என்ற பெயரில் இருக்கிறது.
http://www.skandaweb.com
சக்தி வழிபாடு, வேதங்கள், சாஸ்திரங்கள் முதலியவற்றுக்கான விசேஷ வலைத்தளம் -
http://www.chandraweb.net/
இவை தவிர தமிழிலும் ஆங்கிலத்திலுமாக கீழ்க்கண்ட ப்லாகுகளும் உள்ளன-
தமிழ் மொழி
http://jaybeestrishul11.blogspot.com/
http://jaybeestamilmuseum.blogspot.com/
ஆங்கிலம்
http://jaybeetrident.blogspot.com/
http://jaybeemuseum-e.blogspot.com/
மலேசியா -
http://jaybeeskadaram.blogspot.com/
துக்கடா-
http://jaybeesnotebook.blogspot.com/
http://kadaaramweb.blogspot.com/
http://kadaramnet.blogspot.com/
http://jaybeesnotebook.blogspot.com/2012/09/from-agathiyar-group-1.html
http://kadaramnet.blogspot.com/search?updated-min=2012-01-01T00:00:00-08:00&updated-max=2013-01-01T00:00:00-08:00&max-results=8
·பேஸ்புக் -
தமிழ் -
http://www.facebook.com/jaybee555
ஆங்கிலம் -
http://www.facebook.com/drjaya.barathi
இது ஓர் உலக சாதனை.
அன்புடன்
ஜெயபாரதி
Thursday, November 29, 2012
Monday, November 26, 2012
MINIATURE SCUPTURE
A RARE MINIATURE SCULPTURE
This miniature sculpture is found on a pillar in a very ancient huge temple in North Pandya Country.
The Mid-Pandya dynasty developed a particular style of their own in sculpture.
They also specialised in miniature sculpting.
The Murugan in the picture is known as 'Mayuradhirudar'. AdhiSankarar's SriSubrahmanya Bhujangam starts with the line "Mayuraadhiruudam, Mahaavkyakuudam...."
This sculpture is 1 jaaN in height. A jaaN is 9 inches. You can compare with the palm at the side.
The feathers in the Peacock's breast, Wings, the tail feathers, the legs, the thaNdais worn by the peacock on its legs, the ornaments of Murugan, the face are all meticulously sculpted. You must notice the swirling snake hanging from the peak of the peacock. The Unnamed Unknown Sculptor has created three dimesions within two dimensions.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Thursday, October 25, 2012
THE FRAGRANCE OF MADURAI
அன்பர்களே,
சிலநாட்களுக்கு முன்னர் 'உத்தம புத்திரன்' என்ற பெயரில் ஒரு படம் வந்தது.
ஏற்கனவே இதே பெயரில் இரண்டு படங்கள் வந்தன. ஒன்றில் பியூ சின்னப்பா; இன்னொன்றில் சிவாஜி.
இதை கதை உல்ட்டாப் பண்ணப்பட்டு, இம்சை மன்னன் 23-ஆம் புலிகேசியாக வந்தது.
ஆனால் அந்தப் புதுப் படம் முற்றிலும் வேறு கதையைக் கொண்டது.
இதில் ஒரு பாட்டு வருகிறது.....
"மதுரெ மல்லிஹெ மொட்டு...." என்று வரும்.
இப்போதெல்லாம் மதுரையை 'மதுரெ' என்றோ 'மதுர' என்றோதான் சொல்லவேண்டும். அதுதான் புதுப்பழக்கம். சினிமாவில் அப்படித்தானே வருகிறது?
மதுரை மல்லிகைக்கு அப்படியொரு மகத்துவம்.
மதுரையே மல்லிகை மணத்தால் நிரம்பியிருக்குமாம்.
சிலநாட்களுக்கு முன்னர் 'உத்தம புத்திரன்' என்ற பெயரில் ஒரு படம் வந்தது.
ஏற்கனவே இதே பெயரில் இரண்டு படங்கள் வந்தன. ஒன்றில் பியூ சின்னப்பா; இன்னொன்றில் சிவாஜி.
இதை கதை உல்ட்டாப் பண்ணப்பட்டு, இம்சை மன்னன் 23-ஆம் புலிகேசியாக வந்தது.
ஆனால் அந்தப் புதுப் படம் முற்றிலும் வேறு கதையைக் கொண்டது.
இதில் ஒரு பாட்டு வருகிறது.....
"மதுரெ மல்லிஹெ மொட்டு...." என்று வரும்.
இப்போதெல்லாம் மதுரையை 'மதுரெ' என்றோ 'மதுர' என்றோதான் சொல்லவேண்டும். அதுதான் புதுப்பழக்கம். சினிமாவில் அப்படித்தானே வருகிறது?
மதுரை மல்லிகைக்கு அப்படியொரு மகத்துவம்.
மதுரையே மல்லிகை மணத்தால் நிரம்பியிருக்குமாம்.
ஆனால் பழங்காலத்தில் மல்லிகை மணம் மட்டுமல்ல, பலவித
நறுமணங்களும் கலந்து மதுரையை நிரப்புமாம்.
தூரத்தில் வரும்போதே இந்த நறுமணக் கலவையை முகர்ந்தே
மதுரையைச் சமீபித்துவிட்டதைப் பிரயாணிகள் தெரிந்து கொள்வார்களாம்.
என்னென்ன நறுமணமெல்லாம் மதுரையில் இருந்தது என்பதை
சிலப்பதிகாரப் பாடல் கூறுகிறது. திருவிளையாடல் புராணத்திலும் தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் காணலாம்.
சிலப்பதிகாரப்பாடலைப் பார்ப்போமே.......
காழகிற் சாந்தம் கமழ்பூங்குங்குமம்
நாவிக்குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மதச்சாந்தம் மணங்கமழ் தெய்வத்
தேமென் கொழுஞ் சேறாடி ஆங்குத்
தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லை
போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி
அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத்தெடுத்த
அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்
பல்தேறு பூம்புகை அளைஇ
மதுரை தென்றல் வந்தது காணீர்
நன்சேய்த் தன்றவன் திருவலிமூதூர்
சிலம்பு - 115-133/13
அகில், குங்குமப்பூ, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, சந்தனம் போன்றவற்றின் சாந்துக் கலவைகளின் வாசம்;
மதுரையில் உள்ள வீடுகளில் உள்ள சமையற்கட்டுகளிலிருந்து வரும் தாளிதம் போன்ற சமையல் மணமும் அடுப்புகளிலிருந்து வரும் புகையின் மணமும்;
அங்காடிக் கடைகளில் சுடப்படும் பலகாரங்களின் மணமும் புகையின் மணமும்;
ஆண்களும் பெண்களும் நீராடிவிட்டு, தம்முடைய கூந்தலை உலர்த்திக் கொள்வதற்காக போட்டுக்கொள்ளும் அகில் புகையின் மணமும்;
மதுரையிலுள்ள தோட்டம் துரவுகளில் மலர்ந்த மல்லிகை, மாதவி, செண்பகம், கழுநீர் முதலிய மலர்களின் நறுமணமும்;
ஆகிய இவையனைத்தும் மதுரையிலிருந்து வீசும் தென்றலில் கலந்து வரும்.
இந்த நறுமணக்கலவைதான் மதுரையை அடையாளம் காட்டி விடுமாம்.
அன்புடன்
ஜெயபாரதி
Thursday, October 11, 2012
CATCH A CAT
பூனை பிடிப்பது எப்படி?
1988 என்று நினைக்கிறேன்...... கெடா மாநிலத்திலுள்ள பாலிங் என்னும் ஊரிலுள்ள முருகன் கோயிலில் சொற்பொழிவாற்ற அழைத்தார்கள்.
ஆனால் சொற்பொழிவுக்குத் தலைப்பை, கோயிலாளர்களும்
கொடுக்கவில்லை; நானும் ஏதும் தயார்செய்துகொண்டு செல்லவில்லை.
கோயிலில் சொற்பொழிவை ஆர்ம்பிக்கப்போகும்போது, எதைப் பற்றி பேசவேண்டும் என்று கேட்டேன். அவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. முழிமுழியென்று முழித்தபின்னர், 'எதுனாச்சும் பேசுங்க டாக்டர். ஒங்க இஷ்டம்', என்று சொல்லிவிட்டார்கள்.
முழிமுழியென்று முழிப்பது இப்போது என்னுடைய முறையாகி
விட்டது.
அந்தச் சமயம் பார்த்து பூனை ஒன்று, கூட்டத்திற்குள் நுழைந்து
சென்றது. ருத்திராட்சப் பூனை அல்ல. ஏதோ ஒரு சராசரி கோயில் பூனைதான்.
யாரோ ஒருவர், 'பூனையப் புடிச்சு அந்தாண்டை வுடுங்க', என்றார்.
இன்னொருவர் எழுந்து பூனையைப்பிடிக்க முயன்றார். ஆனால் அதுவோ
டேக்கா கொடுத்துவிட்டு இன்னொருபக்கம் போய்விட்டது.
"பூனையப் பிடிக்கிறதுக்குக்கூட டெக்னிக் தெரிஞ்சிருக்கணும்", என்று
விளையாட்டாகச் சொன்னேன்.
அப்போதுதான் மின்னல்போல் தோன்றியது.
இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்களே, அதுதான்.
'இப்போது நான் 'பூனையைப் பிடிப்பது எப்படி?' என்பதையே
தலைப்பாக வைத்துப்பேசுகிறேன்', என்று ஆரம்பித்தேன். கூட்டத்தினர்
குழம்பிப்போய் பார்த்தனர். விளையாட்டாகச் சொல்கிறேனா, என்ன என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்றும் சொல்ல வில்லை. சொல்வதற்கு அந்தக்காலத்தில் யாருக்குத்தான் தைரியம் இருந்தது?:-)
ஒன்றரை மணி நேரம் பேசினேன். 'மார்ஜாரக்கிசோர நியாயம்,
மர்க்கடக் கிசோர நியாயம்', எனப்படும் சரணாகதித் தத்துவங்களின் விளக்கமாக அந்த சொற்பொழிவு அமைந்தது. அந்த சொற்பொழிவில் வைணவம்தான் முக்கியத்தளம் என்றாலும், ஏசுநாதரும் தலையைக் காட்டிப்போனார். சரணாகதித் தத்துவத்தை மிக அழகாகவும், தெளிவாகவும், நறுக்குத்தெறித்தார்ப்போலவும் சொன்னவரல்லவா
அவர்.
நடுவில் யானை பிடிப்பதைப்பற்றியும் ஒரு கொசிறு செய்தியைப்
போட்டுவைத்தேன். கெடாKedah மாநிலமல்லவா! ஆகவே ஒரு சிறிய
சிலேடையில் புகுந்துவிளையாட வாய்ப்புக்கிடைத்தது. யானைப் பிடிக்கும் 'கெடா(Kedda) முறையைபற்றி சொல்லிவைத்தேன்:-) அந்தக் காலங்களில் சொற்சிலம்பம் ஆடுவதென்றால் மிகவும் பிடிக்கும்:-)
சொற்பொழிவின் கடைசியில் பூனைக்கும் குரங்குக்கும் இடையே
போட்டி வைத்தேன்.
வாக்களிப்பில் பூனையே வென்றது.
அதாவது மார்ஜாரக் கிசோர நியாயமே கூட்டத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Saturday, September 29, 2012
JAYBEE'S LECTURES-#1
JAYBEE'S NETRU, INDRU, NAALAI
LECTURES
This leture was delivered to the students of Univesity Sains Malaysia in Penang in 1993. It was recorded in audio tape.
These lectures were given in the KOMTAR in Penang and other places, around the early 90's. It was filmed as video.
This lecture was given on another occassion. It was vidoe-taped and then converted to DVD.
Subscribe to:
Posts (Atom)






