ஆங்லெய், ஆங்கிலம், எங்லிஷ், இங்கிலீஷ்
·பேஸ்புக்கில் இங்கிலீஷ் என்று நான் எழுதியதற்கு ஓர் ஆசாமி "ஆங்கிலம்' என்ற தமிழ்ச்சொல் இருப்பதை அறியமாட்டீர்களா" என்ற மாதிரியாகச் சொல்லியிருந்தான்.
அதிகம் பிடித்த இங்கிதம் தெரியாத பசங்களை 'அவர் இவர்' என்று சொல்லிக்கொண்டு பணிவதால்தான் அந்தப் பசங்களுக்குக் கொழுப்பும் திமிரும் கூடிவிடுகிறது.
இண்டர்நெட்டில் இந்தத் திமிர் இன்னும் பன்மடங்கு கூடுதலாக இருக்கும்.
'எங்லிஷ்' என்று இங்கிலாந்தியரால் உச்சரிக்கப்பட்ட பெயரை 'இங்கிலீஷ்', 'இங்கிலீசில்' என்று Tamilise செய்து சொல்வதில் என்ன தவறு? இதைப் போய் அன்னியச்சொல் என்ற மாயையை ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.
இங்கிலீசு ஓர் அன்னியச் சொல்லாக இருப்பின் ஆங்கிலமும் அன்னியச் சொல்தான்.
இது ஒரு ·பிரெஞ்சு மொழிச் சொல்லை மூலமாகக் கொண்டது. Anglaise என்னும் சொல்.
இந்தியாவுக்கு கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் வரப்போக இருந்த முக்கிய இனத்தவரின் மொழிகளில் அவர்கள் இங்கிலீஸை எப்படி அழைத்திருக்கிறார்கள்?
Ingles என்று போர்த்துகீசியர் சொல்வார்கள்.
Engels என்று டச்சுக்காரர்கள் சொல்வார்கள்
English என்று டேனிஷ்காரர்கள் சொல்வார்கள்
Ingilizce - துருக்கியர்
Inglese என்று இத்தாலியர்கள்.
இங்லீஸ் என்று பெர்சியரும் அராபியரும்.
Anglais ஆங்லெய் என்று ·பிரெஞ்சுக்காரர்கள் அழைத்தனர்.
அதிலிருந்துதான் ஆங்கிலேயர், ஆங்கிலம் என்ற பெயர் ஏற்பட்டது. உச்சரிப்பும் ஒத்துவரும்.
Anglo என்னும் சொல் ஒன்று இருக்கிறது. ஆனால் இது ஒரு பெயராக இருக்கவில்லை. Anglo-Indian போன்ற கூட்டுச் சொல்லில் வழங்கியது.
இந்த மாதிரியான மாயைகள் பல இருக்கின்றன.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment