FROM AGATHIYAR: 220112
அன்பர்களே,
தை அமாவாசை ஒரு முக்கியமான நாள்.
தர்ப்பணம் போன்றவை, வழிபாடுகள் தவிர இன்னும் சில விசேஷங்களும் அதற்கு உண்டு.
உபாசனை, மந்திர சாஸ்திரப் பிரயோகம், சாதகம், மந்திர உபதேசம், அஷ்ட கர்மா போன்றவற்றிற்கு ஏற்ற நாள்.
குறிப்பாக மந்திர உபதேசத்தை தை அமாவாசைக்காகக் காத்திருந்து, அன்று செய்வார்கள்.
செய்வதற்கும் உரிய நேரத்தை மிகவும் துல்லிதமாகக் கணித்து அந்த நேரத்தில்தான் செய்வார்கள்.
தை அமாவாசையில் உள்ள சில நேரங்கள் ரொம்பவும் விசேஷமானவை.
ஆனால் அந்தக் கணிப்புதான் மிகவும் சிக்கலானது.
ஒன்றரை மணி நேரம், பதின்மூன்றரை நிமிடம், நான்கு நிமிடம், ஒரு கணம் என்று அந்த நேரங்கள் அமைந்திருக்கும்.
இவற்றிலும் பலவகையான Combinations உண்டு.
நோக்கு வர்மம், Hypnotism, Telepathic Thought Blow போன்றவற்றின் பிரயோகங்கள் இந்த மாதிரி நேரங்களில் செய்வது அதீத பலனைக் கொடுக்கும். அபரிமிதம் என்றொரு சொல் இருக்கிறது. அந்த பலனையும் கொடுக்கும்.
மனதில் பொதிந்துள்ள ஆற்றல்களை அதிகரிக்கச் செய்ய சாதகங்கள் செய்யும் நாள்.
மந்திர நூல்களையோ அதிநுட்பக்கலைகளையோ மனனம் செய்வது, படிப்பது போன்றவற்றிற்கு ஏற்ற நாள்.
தியானம் செய்து மனதை ஒடுங்கச்செய்வது பெரும்பலனைக் கொடுப்பதாக அறிவார்ந்த சான்றோர் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட கிழமையில் இந்த திதி அமைவது அளவு கடந்த விசேஷம் கொண்டது என்றும் அந்தச் சான்றோர் சொல்லியிருக்கிறார்கள்.
"இதென்ன.... விஷயங்களை உடைத்து எழுதாமல் பூடகமாக எழுதுகிறாரே..... இவையெல்லாம் அழிந்துபோய்விடமாட்டாதா?" என்று சிலர் யோசிக்கக்கூடும்.
அவற்றையெல்லாம் நீங்கள் சுலபமாக அறிந்துகொள்வதற்கு உங்களுக்கு லிவிதமும் கொடுப்பினையும் இருக்கிறதா என்பது பெரிய கேள்விக் குறியல்லவா?
எல்லெஸ் கோட்பாடு இதற்கெல்லாம் ஒத்துவராது.
எல்லெஸ் கோட்பாடு?
LosAngels Swaminathan Principle.
அவர்தான் அடிக்கடி சொல்வார், "எழுதி வலையில் எங்காவது போட்டு வையுங்கள். யாராவது பார்ப்பார்கள்".
இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், 'இப்படிப்பட்ட விஷயங்களும் இருக்கின்றன', என்பதைத் தெரிவிப்பதற்குத்தான்.
இதில் ஈடுபாடு கொண்டோர் தேட ஆரம்பிப்பார்கள். சிரத்தை எடுத்து சிரமப்பட்டு கற்றுக் கொள்ள முற்படுவார்கள்.
இந்த மாதிரி அதிநுட்பக் கலைகளைக் கற்றுக்கொடுப்பதற்குக்கூட லட்சணம் பார்ப்பார்கள்.
குறிப்பாக - கண்களின் ரேகை, நெற்றி ரேகை, கை ரேகை, பெருவிரல் ரேகை, ஜனன ஜாதகம் போன்றவை.
பார்த்தீர்களா.....?
நிறைய ·பில்ட்டர் போட்டு வைத்திருக்கிறார்கள்.
அன்புடன்
ஜெயபாரதி
No comments:
Post a Comment